டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்துத்துவா, இந்தியை திணிப்பது பசிக்கான மருந்து கிடையாது.. மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி

Google Oneindia Tamil News

டெல்லி: உலக பட்டினிக்குறியீட்டில் இந்தியா கடந்த ஆண்டைவிட தற்போது பின் தங்கி இருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் ட்விட் வெளியிட்டுள்ளார். அதில், 'இந்துத்துவா, இந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது பசிக்கான மருந்து கிடையாது' என பதிவிட்டுள்ளார்

மத்தியில் ஆளும் பாஜக அரசை தனது சமூக வலைத்தளங்கள் வாயிலாக ப.சிதம்பரம் அடிக்கடி விமர்சித்து வருகிறார். நிதி மேலாண்மை, மத்திய அரசின் கொள்கைகளில் குறைபாடு இருப்பதாக அடிக்கடி சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று உலக பட்டினிக்குறியீடு பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எவ்ளோ பெரிய பொய்.. கொரோனாவை வென்றவரா மோடி?பாஜக இப்படி சொல்லுது.. உலக வங்கி அப்படி சொல்லுது -பீட்டர் எவ்ளோ பெரிய பொய்.. கொரோனாவை வென்றவரா மோடி?பாஜக இப்படி சொல்லுது.. உலக வங்கி அப்படி சொல்லுது -பீட்டர்

கடைநிலை வரிசையில் இந்தியா

கடைநிலை வரிசையில் இந்தியா

இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- ஊட்டச்சத்து இன்மை, பட்டினி, குழந்தைகள் போதிய வளர்ச்சியின்மை ஆகிய உண்மையான பிரச்சினைகளுக்கு மாண்பு மிகு பிரதமர் மோடி எப்போது தீர்வு காணப்போகிறார்? இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக கருதப்பட்டுள்ளது. 121 நாடுகள் கொண்ட உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் 107 வது என்ற கடைநிலை வரிசையில் இந்தியா உள்ளது.

8 ஆண்டு கால ஆட்சியில்...

8 ஆண்டு கால ஆட்சியில்...

மோடி அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் அதாவது 2014- முதல் இந்தியா தொடர்ந்து பின் தங்கி வருகிறது. 19.3 சதவீத குழந்தைகள் போதிய எடையின்மை இன்றியும் 35.5 சதவீத குழந்தைகள் போதிய வளர்ச்சி இன்றியும் உள்ளனர். இந்துத்துவா, இந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது பசிக்கான மருந்து கிடையாது. இவ்வாறு ப சிதம்பரம் தனது ட்விட் பதிவில் கூறியுள்ளார்.

உலக பட்டினிக்குறியீடு

உலக பட்டினிக்குறியீடு

முன்னதாக, உலக பட்டினிக்குறியீடு பட்டியலை அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய இரு அமைப்புகளும் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின் தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது.

கடந்த ஆண்டு இந்தியா

கடந்த ஆண்டு இந்தியா

ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருப்பது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு இந்தியா 101-வது இடத்தில் இருந்தது.

பாகிஸ்தான் 99-வது இடம்

பாகிஸ்தான் 99-வது இடம்

நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் மேலும் 6 இடங்கள் பின் தங்கி 107-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 99-வது இடத்திலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை 64-வது இடத்திலும் நேபாளம் 81-வது இடத்திலும் உள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கும் கீழே ஆப்கானிஸ்தான் மட்டுமே உள்ளது.

English summary
Congress president P Chidambaram has issued a tweet questioning Prime Minister Modi about India's lagging behind in the global hunger index. In it, 'Hindutva has posted that imposing Hindi and spreading hatred is not a cure for hunger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X