டிஜிட்டல் மீடியாக்களை ஒழுங்குப்படுத்த மசோதா.. நாடாளுமன்ற குளிர்கால தொடரில் நிறைவேற்ற வாய்ப்பு
டெல்லி: டிஜிட்டல் மீடியாக்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி நாடாளுமன்றத்தில் வரும் 18 ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பயன்படுத்த கூடாத வார்த்தைகளின் பட்டியல் நேற்று வெளியாகி சர்ச்சையானது. இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மீடியாக்களுக்கான மசோதா
இந்நிலையில் தான் இந்த கூட்டத்தொடரில் நாட்டில் டிஜிட்டல் மீடியாக்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு மசோதா கொண்டு வரலாம் என கூறப்படுகிறது. அதாவது டிஜிட்டல் மீடியாக்கள் ஏதேனும் விதிமீறலில் ஈடுபட்டால் ப்ரஸ் பதிவு மற்றும் பிரியாடிக்கல் மசோதாவின் கீழ் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் செய்தித்தாள்கள் மற்றும் அச்சகங்களை ஒழுங்குபடுத்தும் பிரஸ் மற்றும் பதிவுக்கான புத்தக சட்டம் 1867ல் திருத்தம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பதிவு கட்டாயமாகலாம்
இதன்மூலம் செய்திதாள்களை போல் டிஜிட்டல் மீடியாக்களையும் பிரஸ் மற்றும் பீரியடிகல்ஸ் மசோதாவின் கீழ் பதிவு செய்ய வேண்டிய சூழல் உருவாகும் எனவும், டிஜிட்டல் வெளியீட்டாளர்கள், பிரஸ் ரிஜிட்டார் ஜெனரலிடம் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த மசோதா பற்றி இன்னும் அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

காரணம் என்ன?
இந்தியாவில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் செய்தித்தாள் அச்சிடுதல், வெளியிடுதல் உள்ளிட்டவற்றை ஒழுங்குப்படுத்தி, கண்காணித்து வருகிறது. இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால் இந்தியாவில் டிஜிட்டல் மீடியாக்களை கட்டுப்படுத்த எந்த சட்ட நடைமுறையும் இல்லை. இதனால் தான் மத்திய அரசு புதிதாக இந்த மசோதவை கொண்டு வந்து டிஜிட்டல் மீடியாக்களையும் ஒழுங்குப்படுத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்பு நடந்தது என்ன?
முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் கீழ் டிஜிட்டல் மீடியாக்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது புதிய ரூட்டில் மத்திய அரசு யோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications