சீன எல்லையில் மாஸ் காட்டும் இந்தியா.. அமெரிக்காவுடன் போர் ஒத்திகைக்கு திட்டம்.. மாஸ்டர் பிளான்
டெல்லி: அமெரிக்காவுடன் சேர்ந்து அதிரடி கூட்டு ராணுவப் பயிற்சியை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதில் 'ஹைலைட்' என்னவென்றால், இந்த முறை சீனாவுக்கு மிக அருகே சென்று இந்த ராணுவப் பயிற்சியை இந்தியா மேற்கொள்ள இருக்கிறது என்பதுதான்.
இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும், கடல் எல்லைகளிலும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு சீனா நேரம் பார்த்துள்ள நிலையில், இந்த ராணுவப் பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எதிரியாக நினைக்கும் சீனா
இந்தியாவை பொறுத்தவரை, சீனாவை என்றுமே எதிரி நாடாக நினைத்தது கிடையாது. மேலும், அந்நாட்டுடன் நட்பு பாராட்டவே இந்தியா முனைந்தும் வந்தது. ஆனால், இந்தியாவை நட்பு நாடாக பார்க்க சீனா தயாராக இல்லை. ஆசிய கண்டத்தில் தனக்கு நிகராக வளர்ந்து வரும் இந்தியாவை ஒரு எதிரியாகவே சீனா கருதி வருகிறது. மேலும், இந்தியாவின் ஒரு பகுதிகளாக இருக்கும் அருணாச்சல பிரதேசம், லடாக் ஆகியவற்றை ஆக்கிரமிக்கும் முயற்சியிலும் சீனா ஈடுபட்டுள்ளது. ஆனால், சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளை ஒவ்வொரு முறையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. குறிப்பாக, லடாக்கில் இருந்து சீனாவை இந்தியா துரத்தியடித்த சம்பவத்தை தனக்கு நேரந்த அவமானமாகவே சீனா கருதுகிறது.

இந்தியப் பெருங்கடலில் 'கண்'
நிலப்பரப்பில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி இப்படி இருக்கிறது என்றால், கடல் பரப்பிலும் தனது வேலையை சீனா காட்ட தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பகுதிகளை சொந்தம் கொண்டாட சீனா முயற்சிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறது. மேற்குறிப்பிட்ட கடல் பரப்புகளில் மற்ற நாடுகள் வர்த்தகம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது எனவும் சீனா எச்சரித்து வருகிறது. ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா துணிச்சலாக எதிர்கொண்டுள்ளது.

சீனா அருகே போர் ஒத்திகை..
இதுபோன்ற சூழலில், சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞையை கொடுக்கும் விதமாக அந்நாட்டுக்கு மிக அருகே சென்று போர் ஒத்திகை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதுவும் அமெரிக்காவுடன் இணைந்து இந்த போர் ஒத்திகையை இந்தியா நடத்தவுள்ளது. உத்தராகண்டில் உள்ள ஆலி என்ற பகுதியில் வரும் நவம்பர் 15 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை இந்திய ராணுவத்தினரும், அமெரிக்க ராணுவத்தினரும் இந்த போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இந்தப் பகுதியானது சீனாவில் இருந்து வெறும் 100 கி.மீ.தொலைவில்தான் அமைந்துள்ளது. பெரிய பெரிய மலைகள் இருக்கும் இந்தப் பகுதியில் பயங்கர குளிரும் நிலவும். ஒருவேளை, எதிர்காலத்தில் சீனாவுடன் போர் ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்காகவே இந்த இடத்தை இந்தியா தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து ராணுவப் பயிற்சி
அமெரிக்காவுடன் இந்தப் போர் ஒத்திகையை முடித்துக்கொண்ட பின்னர், ஜப்பான், ஆஸ்திரேலியா, 'குவாட்' நாடுகள் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்தியா அடுத்தடுத்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது. இதில் ஜப்பானுடன் சேர்ந்து நடத்தப்படும் போர் ஒத்திகையானது கடலில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் என ஜப்பான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications