டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசத்தல்.. கொரோனா பாதிப்பை தாண்டி எழுந்து வரும் இந்தியா.. குவியும் சர்வதேச பெரு நிறுவன முதலீடுகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்றுநோய் உலகளவில் பல பொருளாதார பேரழிவிற்கு காரணமாகியுள்ளது. ஆனால், இந்த சுகாதார நெருக்கடிக்கு இடையேயும், இந்தியா, அதிக அளவில் பெரிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 15 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நமது நாட்டில் கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் புள்ளி விவரம் வெளியிட்டது.

Recommended Video

    Google Sundar Pichai Announced a 75,000 crores | India’s Digital Economy

    கூகுள், வால்மார்ட், பேஸ்புக், ஹிட்டாச்சி மற்றும் பல நிறுவனங்கள் இந்த முதலீடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையர் நீலா சத்யாநாராயணா கொரோனா தாக்கி மரணம்மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையர் நீலா சத்யாநாராயணா கொரோனா தாக்கி மரணம்

    சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

    சர்வதேச நாணய நிதியம் கணிப்பு


    2020ம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்திற்கு -4.9 சதவிகிதம் எதிர்மறையான வளர்ச்சி விகிதம்தான் என்ற ஒரு கணிப்பை, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டது. இந்திய பொருளாதார வளர்ச்சி 4.5 சதவிகிதம் என்ற அளவுக்கு குறையும் என்றும், சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது.
    ஆனால், கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் 98 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த ஆண்டு நிலவரம்

    கடந்த ஆண்டு நிலவரம்

    1,241 திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு இதே மூன்று மாத காலத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 673 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2500 புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை நாடு முழுவதும் கையெழுத்தாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு அது வெகுவாக குறைந்துள்ளது.

    கூகுள்

    கூகுள்

    சுந்தர் பிச்சை தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அடுத்த 5-7 ஆண்டுகளில் கூட்டாளி மற்றும் பங்கு முதலீடுகள் மூலம், இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இண்டர்நெட் சேவையை ஒவ்வொரு இந்தியருக்கும் தங்கள் சொந்த மொழியில் பயன்படுத்த அதுவும் குறைந்த விலையில், இணையம் கிடைப்பதை உறுதி செய்யப்போவதாக கூகுள் அறிவித்தது.

    பேஸ்புக் முதலீடு

    பேஸ்புக் முதலீடு

    மார்க் ஜுக்கர்பெர்க்கின் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், ஏப்ரல் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 5.7 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்து. அந்த நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை பெற்றது. மற்றொரு நிறுவனத்தில் பேஸ்புக் இதுவரை செய்த மிகப்பெரிய ஒற்றை முதலீடு இதுதான். .
    ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான ஹிட்டாச்சி, இந்திய ரயில்வேயில் 15.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள 400 மின்சார இன்ஜின்களுக்கான மின்மாற்றிகளில் முதலீடு செய்யவுள்ளது.

    தாம்சன்

    தாம்சன்

    நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு உபகரணங்கள் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ .1,000 கோடி முதலீடு செய்ய தாம்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரான்சை சேர்ந்த நுகர்வோர் மின்னணு நிறுவனமான தாம்சன் தற்போது ஸ்மார்ட் டிவி மற்றும் வாஷிங் மெஷின் சந்தையில் ஓரளவுக்கு பங்கு வகித்து வருகிறது.

    சவுதி அரேபியா

    சவுதி அரேபியா

    உலகின் மிகப்பெரிய sovereign wealth fund நிறுவனத்தில் ஒன்றான சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியகம் (பிஐஎஃப்) ஜூன் மாதத்தில் ஜியோ நிறுவனத்தின் பல்வேறு, பிளாட்ஃபார்ம்களில் ரூ .11,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

    ஹுண்டாய்

    ஹுண்டாய்

    தென் கொரியாவின், முன்னணி கார் நிறுவனமான ஹூண்டாய், வாகனங்களின் மென்பொருள் மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த இந்தியாவில் தனது தொழில்நுட்ப மையத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்தது. ஹைதராபாத்தில் அதன் இரண்டாவது தொழில்நுட்ப மையத்தை துவங்க உள்ளது. மேலும் நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை நாட்டில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

    கியா கார் நிறுவனம்

    கியா கார் நிறுவனம்

    தென் கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான கியா, ஆந்திராவில் உள்ள அனந்த்பூர் தொழிற்சாலையில் ரூ .400 கோடிக்கு மேல் முதலீடு செய்வதாக மே மாதம் அறிவித்தது. 2019ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி, சந்தை பங்கின் அடிப்படையில் இந்தியாவின் டாப் 5 கார் தயாரிப்பாளர்களில் கியா மோட்டார்ஸ் ஒன்றாக இருந்தது. டொயோட்டா மற்றும் ஹோண்டா போன்றவையும் இந்த பட்டியலில் உள்ளன.

    சென்னை தொழிற்சாலை

    சென்னை தொழிற்சாலை

    வால்மார்ட் தனது பிளிப்கார்ட் தளத்தில் 1.2 பில்லியன் டாலர் புதிய முதலீட்டை அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை உற்பத்தி கூட்டாளி
    தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான். எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளராகும். இது சென்னையில் உள்ள தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்காக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

    English summary
    India was an attractive investment destination during the coronavirus health crisis, says statistics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X