இந்தியா அணிக்கு 280-290 சீட் கன்பார்ம்- டெல்லிக்கு ஸ்டாலின் உள்ளிட்டோரை வரவழைத்த அதிரடி ரிப்போர்ட்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் “இந்தியா” கூட்டணி 280 முதல் 290 இடங்களைக் கைப்பற்றும்; காங்கிரஸ் கட்சி தனித்தே 120 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் என கிடைத்திருக்கும் சர்வே ரிப்போர்ட்டுகள்தான் டெல்லியில் “இந்தியா” கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு காரணம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
லோக்சபா தேர்தலின் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் வெளியாகும் லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

பாஜகவின் நம்பிக்கை: லோக்சபா தேர்தல் பிரசார களத்தில் பாஜகவைப் பொறுத்தவரையில் 370 முதல் 400 இடங்களில் வெல்வோம் என்பது தீவிர பேச்சாக இருந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றியே தீரும் என்பது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
“இந்தியா” கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை: அதேநேரத்தில் பாஜக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்காது; பெரும்பான்மையே கிடைக்காது என்பது “இந்தியா” கூட்டணி தலைவர்களின் கருத்தாக இருந்தது. யோகேந்திர யாதவ் உள்ளிட்ட தேர்தல் வியூக வகுப்பாளர்களும் கூட பாஜக தனித்து 260 முதல் 280 இடங்களில்தான் வெல்லும் என தெரிவித்திருந்தனர்.
டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்: இந்த பின்னணியில் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந் தேதிக்கு முன்னதாக இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1-ந் தேதியே டெல்லியில் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
குட்பை சொன்ன ராகுல் காந்தி: மேலும் கடந்த சில நாட்களாக ராகுல் காந்தியும் தமது தேர்தல் பிரசாரத்தில் ஜூன் 4-ந் தேதிக்குப் பின்னர் மோடி வீட்டுக்குப் போவது உறுதி என பேசி வருகிறார். இன்றைய தேர்தல் பிரசாரத்திலும் ”ஜூன் 4க்கு பிறகு...Good Bye BJP Good Bye நரேந்திர மோடி... டாடா! பொதுமக்களை ஏமாற்றும் இந்த போலி ஆசாமிக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்தியா வாக்குகளைப் பெறுகிறது - சத்தமாகவும் தெளிவாகவும்! பாஜகவிடம் இருந்து நாடு விடுதலை பெறும், நாட்டின் உண்மையான நல்ல நாட்கள் வரவுள்ளன - விரைவில், வெகு விரைவில்! என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.
சீனியர் பத்திரிகையாளர்கள் ரிப்போர்ட்: இது தொடர்பாக டெல்லி வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, காங்கிரஸ் கட்சியின் நிகழ்வுகளை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக கவரேஜ் செய்து வரும் சில சீனியர் பத்திரிகையாளர்கள், லோக்சபா தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என “இந்தியா” கூட்டணி தலைவர்களிடம் ரிப்போர்ட் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
சர்வே முடிவு என்ன?: சீனியர் பத்திரிகையாளர்கள் கொடுத்த லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான ரிப்போர்ட்டில், இந்தியா கூட்டணிக்கு 280 முதல் 290 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். காங்கிரஸ் கட்சி தனித்தே 120 முதல் 130 இடங்களைக் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். வட இந்தியா தேர்தல் களத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தான் இந்த தலைகீழ் மாற்றத்துக்கு காரணம் எனவும் அந்த அறிக்கை விவரித்திருக்கிறதாம்.
ஜூன் 1 டெல்லி கூட்டம்: இதனடிப்படையில்தான் புதிய ஆட்சி அமைப்பதற்கான முன் நகர்வுகளை மேற்கொள்ள ஜூன் 1-ந் தேதி டெல்லி கூட்டத்துக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். தற்போது இந்த சர்வே முடிவுகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications