நாட்டில் ஒரே நாளில் 92788 பேருக்கு கொரோனா... உயிரிழப்பில் முதல் இடத்தில் இந்தியா!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இதுவரைக்கும் 53,05,475 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 42,05,201 ஆக இருக்கிறது. இன்னும் 10,13, 907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரைக்கும் இந்தியாவில் கொரோனாவுக்கு 85, 625 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1221 பேர் உயிரிழந்து உள்ளனர். உலகிலேயே இந்தியாவில்தான் ஒரு நாள் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது. ஒரே நாளில் 92788 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புனே இறப்பு

புனே இறப்பு

மகாராஷ்டிராவில் 11,67,496 பேர் பாதிக்கப்பட்டு, 31,791 பேர் உயிரிழந்துள்ளனர். 3,00,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்றவர்களில் 8,34,432 பேர் மீண்டு வந்துள்ளனர். இந்த மாநிலத்தில் புனேவில் அதிகபட்சமாக 2,53,554 பேரும், இரண்டாவது மும்பையில் 1,80,668 பேரும், தானேவில் 1,66,982 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புனே மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 1,68,730 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மும்பையில் 1,37,664 ஆகவும், தானேவில் 1,32,611 ஆகவும் இருக்கிறது.

கிழக்கு கோதாவரி

கிழக்கு கோதாவரி

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்து ஆந்திராவில் 6,09,558 பேர் பாதிக்கப்பட்டு, 5,244 பேர் உயிரிழந்துள்ளனர். 84,423 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,19,891 மீண்டு வந்துள்ளனர். கிழக்கு கோதாவரியில் அதிகபட்சமாக 83,852 பேரும், மேற்கு கோதாவரியில் 55,670 பேரும், கர்னூலில் 53,435 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரியில் 478 பேரும், மேற்கு கோதாவரியில் 409 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இதுவரைக்கும் 5,30,908 பேர் பாதிக்கப்பட்டு 8,685 பேர் உயிரிழந்துள்ளனர். 46,506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோயில் இருந்து இதுவரைக்கும் 4,75,717 பேர் மீண்டு வந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 63 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5525 பேர் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

கோவை

கோவை

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 1,53,616 பேரும், செங்கல்பட்டில் 31,972 பேரும், திருவாரூரில் 29,664 பேரும், கோவையில் 24,778 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரைக்கும் 3,034 பேர் உயிரிழந்துள்ளனர். இது செங்கல்பட்டில் 504 ஆகவும், திருவாரூரில் 512ஆகவும், கோவையில் 372 ஆகவும் இருக்கிறது.

பெங்களூரு

பெங்களூரு

கர்நாடகாவில் 5,02,982 பேர் பாதிக்கப்பட்டு, 7,808 பேர் உயிரிழந்துள்ளனர். 1,01,129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,94,026 பேர் மீண்டு வந்துள்ளனர். இந்த மாநிலத்தில் பெங்களூருவில் அதிகபட்சமாக 1,87,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டும் 2,592 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். மைசூருவில் இதுவரைக்கும் 28,677 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, 667 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பெங்களூருவில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லக்னோ

லக்னோ

உத்தரப்பிரதேசத்தில் 3,42,788 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, 4,869 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 67,825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,70,094 பேர் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். லக்னோவில் அதிகபட்சமாக 44,109 பேருக்கும், கான்பூர் நகரில் 21,962 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. லக்னோவில் 576 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா குறைவு

கொரோனா குறைவு

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்த டெல்லியில் தற்போது குறைந்து வருகிறது. இங்கு 2,38,828 பேர் பாதிக்கப்பட்டு, 4,907 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்துடன் ஒப்பிடுகையில் டெல்லியில் உயிரிழப்பு குறைவு. இங்கு தற்போது 32,250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,01,671 பேர் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+