நாடு முழுவதும் குறைந்த கொரோனா மரணங்கள் - 723 பேர் மட்டுமே உயிரிழப்பு - நிம்மதி பெருமூச்சு

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழே குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 723 ஆக குறைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழே குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 723 ஆக குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 800க்கு கீழே குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடையத் தொடங்கியுள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 39,796 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3,05,85,229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

India covid Update 39,796 new cases in last 24 hours 723 Covid deaths lowest in 3 months

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 42,352 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,97,00,430 பேராக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் விகிதம் 97.11% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 723 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,02,728 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 4,82,071 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜூலை 4ஆம் தேதி வரைக்கும் 35,28,92,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் 41,97,77,457 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரே நாளில் 15,22,504 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+