Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்டர்நெட் பயன்படுத்த கூட தனி வரி? ஆலோசிக்கும் மத்திய அரசு.. அப்போ ரீசார்ஜ் கட்டணம் எகிறுமே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகளவில் மிக அதிகமான டேட்டா பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இதற்கிடையே மக்கள் இதுபோல டேட்டா யூஸ் செய்வதற்கும் தனியாக வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து டெலிகாம் துறைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்தியாவில் நேரடி வரிவருவாயில் மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு சலுகைகளை அறிவித்துவிட்டன. இதனால் மறைமுக வரிகளில் மூலம் நாட்டில் வரி வருவாய் பெருக்க பல்வேறு புதிய வழிகளைத் தேடி வருகிறது. அதன்படி சமீபத்தில் புதிய வரி வருமான முறை குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Mobile tax telecom

டேட்டா பயன்பாடு

அதாவது தினசரி டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடையே ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில், அப்போது தான் இந்த யோசனை எழுந்துள்ளது. இப்போது உலகெங்கும் மிகக் குறைந்த விலைக்கு டேட்டா கிடைக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. மலிவான விலையில் இதுபோல டேட்டா கிடைப்பதால் உலகின் மிகப் பெரிய டேட்டா நுகர்வு சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்தச் சூழலில் தான் டேட்டாவுக்கு வரி விதிக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டுவதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்து செப்டம்பர் 2026க்குள் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கத் தொலைத்தொடர்புத் துறைக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனி வரி

இந்த புதிய வரி விதிப்பு திட்டம் தொலைத்தொடர்புத் துறைக்கு புதிய வருவாய் ஆதாரமாக அமையும் என அதிகாரிகள் நம்புகின்றனர். அரசு தற்போது ஸ்பெக்ட்ரம் ஏலங்கள் மற்றும் உரிமக் கட்டணங்கள் மூலமே வருவாய் ஈட்டி வருகிறது. வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு 18% ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். இந்தச் சூழலில் தான் டேட்டாவுக்கு தனி வரி என்பது குறித்து பரிசீலனை நடந்துள்ளது.

2025 நிதியாண்டில் இந்திய யூசர்கள் 229 பில்லியன் ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தியுள்ளனர். ஒரு ஜிபிக்கு ஒரு ரூபாய் வரி விதிக்கப்பட்டால் கூட, ஆண்டுதோறும் சுமார் ₹22,900 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இது அரசுக்குக் கணிசமான வரியாகவே தெரிகிறது. இதனால் அரசு இந்த கூடுதல் வரியை விதிக்கும் என்றே தெரிகிறது.


குறைந்த லாபம்

அதேநேரம் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே மிகக் குறைந்த லாபத்தில் இயங்குகின்றன. இதன் காரணமாகவே அவர்கள் இதர முறைகளில் வருமானத்தை ஈட்டத் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். இதனால் இந்த வரியை, அது ஜிபிக்கு ஒரு ரூபாய் என மிகக் குறைந்ததாக இருந்தாலும் கூட, டெலிகாம் நிறுவனங்கள் அந்த வரியைச் செலுத்தாது. மாறாக யூசர்களின் கட்டணமே கடைசியில் உயரும் எனத் தெரிகிறது.

"இந்திய ஐடி துறையை AI அச்சுறுத்தும்.. ஆனால் அழிக்காது.." ரகுராம் ராஜன் சொன்ன மிக முக்கிய தகவல்

கூடுதல் செலவு

ஏற்கனவே லாபத்தை அதிகரிக்க டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்கள் ரீச்சார்ஜ் திட்டங்களின் ரேட்டை உயர்த்தி வருகின்றன. இப்போது டேட்டா என்பது கிட்டத்தட்ட அடிப்படைத் தேவையாக மாறிவிட்ட நிலையில், இதுபோல ரீச்சார்ஜ் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் கூட பெரும் சிரமத்தை தருகிறது. இந்தச் சூழலில் டேட்டாவுக்கு தனியார் வரி விதிக்கப்பட்டால், கட்டணங்கள் கடுமையாக அதிகரிக்கலாம். உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா திட்டத்தைப் பயன்படுத்துபவர், மாதந்தோறும் ₹60 கூடுதலாகக் கட்ட வேண்டி இருக்கும்.

கவனிக்க வேண்டியது

அதேநேரம் இப்போது இந்த தகவல் வந்ததாலேயே உடனடியாக நீங்கள் உங்கள் அடுத்த ரீச்சார்ஜ்ஜில் வரி கட்ட வேண்டும் என இல்லை. இது தற்போது பரிசீலனை நிலையிலேயே இருக்கிறது. இது பல்வேறு அதிகாரிகள் குழுக்கள் மூலம் பரிசீலனை செய்யப்படும். அதன் பிறகு இதற்குத் தேவையான விதிகள் உருவாக்கப்பட்டு, வரி வசூல் ஆரம்பிக்கும். ஆய்வுக்குப் பிறகு டேட்டாவுக்கு வரி வேண்டாம் எனவும் முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது அரசு பரிசீலனை செய்தே இறுதி முடிவை எடுக்கும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+