டாப் கியரில் இந்திய பொருளாதாரம்.. 7.2% வேகத்தில் வளருமாம்! பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
டெல்லி: இந்திய ஜிடிபி 2026-2027 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8-7.2% உயரும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. FY25ல் நிதிப்பற்றாக்குறை 4.8% ஆகக் குறைந்துள்ளதாகவும் FY26ல் நிதிப்பற்றாக்குறை இலக்கு 4.4%ஆக வைக்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாக உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பொருளாதார ஆய்வறிக்கை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். இதில் இந்திய ஜிடிபி 2026-2027 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8-7.2% உயரும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப்பற்றாக்குறையைப் பொறுத்தவரை 2025-2026 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.8% ஆகக் குறைவு; இதனால் தனியார் நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பது எளிதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.4% குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது வெளிநாட்டு முதலீடுகளை (FPI) ஈர்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிடிபி வளர்ச்சி
2025-2026 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களின் நுகர்வு சார்ந்த பங்குகளை (Consumption Stocks) ஊக்குவிக்கிறது. நடுத்தரக் கால வளர்ச்சி இலக்கு 7% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.
வரிச்சுமை குறையும்
GST மாற்றம்... GST சீர்திருத்தங்கள் மூலம் வரிச்சுமை குறைந்துள்ளது. FMCG மற்றும் ஆட்டோமொபைல் துறைகளுக்கு இது சாதகமாக அமையும். உணவு அல்லாத வங்கிக் கடன் 10-14% உயர்ந்துள்ளது. இது தொழில்துறை விரிவாக்கத்திற்கு (Capex) உதவும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2026- 2027 நிதியாண்டு வளர்ச்சி 6.8-7.2% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.
முக்கியமான பாயிண்டுகள்
- ஏற்றுமதி: சேவைத் துறை மற்றும் PLI திட்ட உற்பத்தி மூலம் ரூபாய் மதிப்பு வலுவடையும்; இது ஏற்றுமதியாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்.
- மாநில அரசுகள்: மாநிலங்களின் ரொக்கப் பரிமாற்றத் திட்டங்கள் அதிகரித்துள்ளது; இது உள்கட்டமைப்பு முதலீடுகளைப் பாதிக்கலாம்.
- EU வர்த்தகம்: ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியை அதிகரிக்கும்.
- பணவீக்கம்: பணவீக்கம் குறைவாக உள்ளதால், RBI வட்டி விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கும்.
- அரசு கடன்: பொதுக்கடன் 7.1%ஆகக் குறைந்தது.. இது வங்கிகளுக்கான அபாயத்தைக் குறைக்கிறது.
- தனியார் முதலீடு: தொழிற்சாலைகளின் பயன்பாடு 72% ஆக உயர்வு; ஸ்டீல் மற்றும் சிமெண்ட் துறைகளுக்குச் சாதகமாக அமையும்.
- AI திட்டம்: செயற்கை நுண்ணறிவுக்கான (AI) புதிய திட்டம் வெளியிடப்படும்.. தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களுக்குப் பயனளிக்கும்.
- தற்சார்பு: செமிகண்டக்டர் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு இறக்குமதி தேவையைக் குறைக்கும்.
- உள்கட்டமைப்பு: பொதுத்துறை முதலீடு GDP-ல் 4% ஆக நிலைப்பு; சாலை மற்றும் துறைமுக நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கும்.
- எரிசக்தி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 254 GW எட்டியது; அணுசக்தி FDI மற்றும் பசுமை திட்டங்களுக்குப் பலனளிக்கும்.
- MSME கடன்: சிறு குறு தொழில்களுக்கான கடன் உத்தரவாதம்; சிறிய ஏற்றுமதியாளர்கள் வளர உதவும்.
- ரூபாய் மதிப்பு: ரூபாய் மதிப்பு 6.5% சரிந்துள்ள நிலையில், இது இறக்குமதி சார்ந்த துறைகளில் முதலீட்டு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- விக்சித் பாரத்: தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறைப்பு காரணமாக 'வளர்ந்த இந்தியா' இலக்கை நோக்கிய பயணம் மேலும் வேகமடையும்.


Click it and Unblock the Notifications
