டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர் செய்தி..! வலுவாகும் இந்திய கடற்படை... அமெரிக்காவின் நவீன ஹெலிகாப்டர்கள் கடற்படையில் இணைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய கடற்படையை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் இரண்டு புதிய எம்.எச் -60 ஆர் மல்டி-ரோல் ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து MH-60R என்ற மல்டி ரோல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய கடற்படை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சுமார் 2.4 பில்லியின் டாலர் மதிப்பில் 24 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

India receives its first two 24 MH-60R helicopters from US

இந்த MH-60R ஹெலிகாப்டர்கள் மிகவும் நவீனத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் கடற்படையில் இந்த விமானத்தைச் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், முதல்கட்டமாக இரண்டு புதிய எம்.எச் -60 ஆர் மல்டி-ரோல் ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சான் டியாகோவில் உள்ள கடற்படை விமான தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமெரிக்கக் கடற்படை புதிய ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது.

இந்த ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படையின் தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம் என்பது இதன் முக்கிய சிறப்பு. மேலும், தேவைக்கு ஏற்ப உபகரணங்களையும் ஆயுதங்களையும் சேர்க்க முடியும்.

இது குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியக் கடற்படையின் திறன்களை மேலும் மேம்படுத்தும். ஹெலிகாப்டர்களை இயக்குவது குறித்து பயிற்சி பெற, இந்தியக் கடற்படையின் முதல் பேட்ஜ் தற்போது அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

English summary
The Indian Navy has received two MH-60R multi-role helicopters from the US, in a boost to its combat capabilities. Officials said that the Navy received the choppers from the US Navy in a ceremony held at a naval air station in San Diego on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X