3 நாட்களில் 2ஆவது முறையாக உயர்வு.. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா
டெல்லி: இந்தியாவில் கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 1,975 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்த முதல் நபர் கேரளாவில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து அங்கும் இங்கும் ஒவ்வொன்றாக அதிகரித்து வந்தது.
கொரோனா குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளது. அவை கொரோனா அதிகம் பாதிக்காத மாவட்டங்களாக மாற தொடங்கியுள்ளன என்றார்.

சிகிச்சை
கொரோனா பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,539 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 875 ஆக அதிகரித்துள்ளது. அது போல் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,913 ஆகும். தற்போது மருத்துவமனையில் 20,177 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொற்று
குணமடைந்தோரின் சதவீதம் 21.96 ஆக உள்ளது. கடந்த 10 நாட்களில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் 12 சதவீதமாக இருந்த எண்ணிக்கை தற்போது 21.96 சதவீதமாகிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் முறையாக ஒரே நாளில் 1,752 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

தொற்று
இதையடுத்து நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,975 ஆனது. கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக அதிகம் பேருக்கு பாதித்துள்ளது. வெள்ளிக்கிழமையை காட்டிலும் நேற்றைய தினம் கூடுதலாக 223 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை
மகாராஷ்டிராவில் மொத்தம் 7,628 பேருக்கும் குஜராத்தில் 3,071 பேருக்கும் , டெல்லியில் 2,625 பேருக்கும், ராஜஸ்தானில் 2,083 பேருக்கும் மத்திய பிரதேசத்தில் 2,096 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 1,843 பேருக்கும், தமிழகத்தில் 1,885 பேருக்கும், ஆந்திரத்தில் 1,097 பேருக்கும், தெலுங்கானாவில் 991 பேருக்கும் என கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் எண்ணிக்கை அதிகரித்தது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருவதே காரணமாகும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேகாலயா
மொத்தம் இறந்தவர்களில் மகாராஷ்டிராவில் 323 பேரும், குஜராத்தில் 133 பேரும், மத்திய பிரதேசத்தில் 99 பேரும், டெல்லியில் 54 பேரும், ஆந்திரத்தில் 31 பேரும் ராஜஸ்தானில் 33 பேரும், தமிழகத்தில் 24 பேரும், பஞ்சாப்பில் 17 பேரும்,ஜம்மு காஷ்மீரில் 6 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஹரியானாவில் தலா 3 பேரும், பீகாரில் 2 பேரும், மேகாலயா, ஹிமாச்சல் பிரதேசம், ஒடிஸா, அஸ்ஸாமில் தலா ஒருவர் ஆவர்.

3ஆவது முறை
வெளிநாடுகளில் மட்டுமே கொத்து கொத்தாக ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் உயர்ந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அதே நிலை நீடித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லை தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் இன்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார். இன்று நடைபெறும் ஆலோசனை 3 ஆவது முறையாக நடத்தப்படுவதாகும். இதனிடையே பிளாஸ்மா சிகிச்சையால் 49 வயது ஆண் ஒருவர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications