இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 67,208 பேர் பாதிப்பு - 2,330 பேர் மரணம்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 60 ஆயிரம் ஆக குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 67,208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 60ஆயிரம், நேற்று 62 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 67 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 10 நாட்களாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.
தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 67,208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,97,00,313 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,570 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,84,91,670 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கையை அதிகரித்து வருகிறது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,26,740 பேராக குறைந்துள்ளது. கடந்த 71 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 2,330 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,81,903 பேராக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் ஜூன் 16 ஆம் தேதி வரை 26,55,19,251 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 38,52,38,220 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் 19,31,249 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications