டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5ஜி அலைக்கற்றை சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்? ராஜ்யசபாவில் வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: 5 ஜி அலைக்கற்றை சேவைகள் நாட்டில் 2022-2023-ம் ஆண்டில் தொடங்கப்படலாம் என ராஜ்யசபாவில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விகள்: (அ) நாட்டில் 5ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்? (ஆ) 5ஜி அலைக்கற்றையின் ஏலச் செயல்பாட்டின் போது ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் வைப்புத்தொகை வசூலிக்கப்படுமா? படாதா? (இ) வசூலிக்கப்படவில்லை எனில், காரணம் என்ன? அரசுக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு?
(ஈ) கருவூலத்திற்கு எதிர்பார்க்கப்படும் பெரும் இழப்பைக் கருத்தில் கொண்டு, அரசு விசாரணைக்கு உத்தரவிடுமா? முழு டெண்டர் நடைமுறைகளையும் மறுபரிசீலனை செய்யுமா?

India will get 5G services by 2022-23: Union Minister Ashwini Vaishnaw

வைகோ கேள்விகளுக்கு, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 29.07.2022 அன்று அளித்துள்ள பதில் வருமாறு:

(அ) தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களால் (TSPs) 2022-23 ஆம் ஆண்டில் 5ஜி அலைபேசி சேவை தொடங்கப்படலாம். நாட்டில் சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ந்து வருவதால், 5ஜி சேவைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

(ஆ) முதல் (ஈ) வரை: ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் (SUC) சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் சராசரி சதவீதமாக கணக்கிடப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்பட்டபோது, இது ஏலத்திற்கு முன் தேதியிட்ட மரபு ஆகும்.

தொலைத்தொடர்புத் துறையில் கட்டமைப்பு மற்றும் நடைமுறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், பணப் புழக்கத்தை எளிதாக்கவும் 'தொலைத்தொடர்புத் துறையில் சீர்திருத்தங்கள் மற்றும் ஆதரவு தொகுப்பு'க்கு ஒன்றிய அமைச்சரவை 2021 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR), வங்கி உத்தரவாதத் தேவைகளின் முறைப்படுத்துதல், தாமதமாகக் கொடுப்பவைகளுக்கான வட்டி விகிதத்தை முறைப்படுத்துதல், எதிர்கால ஏலங்களில் கூடுதல் நிதிச்சுமை இல்லாமல் ஸ்பெக்ட்ரம் பகிர்வு போன்றவை சீர்திருத்த நடவடிக்கைகளில் அடங்கும்.
வேலை வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும், உருவாக்குவதற்கும், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்கும், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பணப் புழக்கத்தை ஊக்குவிப்பதற்கும், முதலீட்டை ஊக்குவிப்பதற்கும், தொலைதொடர்பு சேவை வழங்குபவர்கள் மீதான ஒழுங்குமுறைச் சுமையைக் குறைப்பதற்கும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
11.4.2022 தேதியிட்ட தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரையில் கூறியதாவது:

i) வருங்கால ஏலங்களில் பெறப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மீதான வரியை ரத்து செய்தது கால தாமதமான சீர்திருத்தமாகும்.

ii) எதிர்கால ஏலங்களில் ஸ்பெக்ட்ரம் மீதான பயன்பாட்டுக் கட்டணங்கள் நீக்கம், தொலை தொடர்பு சேவை வழங்குபவர்களின் ஒழுங்குமுறைச்
சுமையைக் குறைக்கப் பயன்படும்.

Recommended Video

    5G Auction | பிரம்மாண்டமாக நடந்த 5G ஏலம்! *India

    ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டண விகிதங்களில் மாற்றம் செய்துள்ளது அனைத்து ஏலதாரர்களுக்கும் தெரியும். 2022 ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏல நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவும், குறிப்பிடத்தக்க அளவில் ஸ்பெக்ட்ரம் வருமானம் வளர்ச்சிக்கு செப்டம்பர் 2021 இல் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் காரணம் ஆகும். இவ்வாறு அமைச்சர் வைஷ்ணவ் பதிலளித்தார்.

    English summary
    Union Minister Ashwini Vaishnaw said that India will get 5G services by 2022-23.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X