ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நேரடியாக கண்காணித்த ராணுவ தளபதி! வெளியானது புதிய புகைப்படங்கள்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஆபரேஷன்ஸ் ரூமிலிருந்து ராணுவ உயர் அதிகாரிகள் ராணுவத்தின் செயல்பாடுகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை ராணுவம் வெளியிட்டிருக்கிறது.
அதில், ராணுவத் தலைமை ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங் ஆகியோர் ராணுவ நடவடிக்கைகளை உண்ணிப்பாக கண்காணித்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மே.7ம் தேதியன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் இலக்கு வைக்கப்பட்டன. இதனையடுத்து நள்ளிரவு 1.05 மணிக்கு இந்திய விமானப்படை தாக்குதலை தொடங்கியது. மொத்தம் 25 நிமிட தக்குதலில் அனைத்து இலக்குகளும் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. இதில் 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் நேரத்தில் முப்படைகளின் தளபதிகளும், ஆபரேஷனல் ரூமில் ராணுவத்தின் நடவடிக்கைகளை நேரடியாக கவனித்துக்கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய புத்தகங்கள் ராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ஆவணப்படுத்தும் விதமாக இந்த புத்தகம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
பயங்கரவாதத்தை நாங்கள் எந்த வகையிலும் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்துவதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இருந்திருக்கிறது.
ஆனால் இந்த தாக்குதலை தவறாக புரிந்துக்கொண்ட பாகிஸ்தான் வேண்டும் என்றே இந்தியா மீது பதில் தாக்குதலை தொடங்கியது. ஆனால் பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டன. இந்தியாவின் பலத்தை இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தான் நன்கு உணர்ந்துக்கொண்டது. மட்டுமல்லாது பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எவ்வளவு வீரியமாக இருக்கும் என்பதையும் சர்வதேச நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் விளக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications