டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 10 நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ பயன்படுத்தலாம்.. விரைவில் அமலுக்கு வரும் சூப்பர் வசதி

Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் விரைவில் தங்கள் சர்வதேச மொபைல் எண் மூலமாகே யுபிஐ வசதியை பயன்படுத்த முடியும் என்று தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளில் இந்த வசதி அமலாக உள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் யுபிஐ மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் ஜெட் வேகத்தில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி இருப்பதால் இதன் பயன்பாடு அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. பயன்படுத்துவதற்கு வசதியாகவும் சில வினாடிகளில் பணத்தை அனுப்பவும் முடிவதால் வாடிக்கையாளர்கள் பலரும் ரொக்க பரிமாற்றத்தை விட யுபிஐ மூலமாக பணம் செலுத்துவதையே விரும்புவதாக வணிக நிறுவனங்களும் சொல்லும் தகவலாக உள்ளது.

ஜம்முன்னு ரெடியாகும் சென்னை-பெங்களூர் 8 வழி எக்ஸ்பிரஸ் சாலை! எந்த ரூட்ல போகுது தெரியுமா?ஜம்முன்னு ரெடியாகும் சென்னை-பெங்களூர் 8 வழி எக்ஸ்பிரஸ் சாலை! எந்த ரூட்ல போகுது தெரியுமா?

சர்வதேச மொபைல் எண்களை பயன்படுத்தி

சர்வதேச மொபைல் எண்களை பயன்படுத்தி

இந்தியாவில் மெட்ரோ நகரம் முதல் குக்கிராமம் வரை யுபிஐ பயன்பாடு பெருகிவிட்ட நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் யுபிஐ வசதியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் அறிமுகம் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்காக இந்திய மொபைல் எண்களை சார்ந்து இருக்காமல் சர்வதேச மொபைல் எண்களை பயன்படுத்தியே பரிவர்த்தனை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனை

யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனை

சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரெபியா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து ஆகிய 10 நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) இந்த வசதியை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் கூறுகையில், "என்ஆர்இ/என்ஆர்ஓ அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் சர்வதேச மொபைல் எண்களைக் கொண்டே யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனை செய்ய முடியும்.

ஏப்ரல் 30 வரை அவகாசம்

ஏப்ரல் 30 வரை அவகாசம்

இந்த உத்தரவை செயல்படுத்த வங்கிகளுக்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் விதிமுறைகளின் படி இந்த கணக்குகள் செயல்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி விதிகளையும் பணமோசடி அல்லது பயங்கரவாத நிதிக்கு எதிராக பாதுகாப்பு கொண்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு நிதி தொகை

வங்கிகளுக்கு நிதி தொகை

முன்னதாக இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரூபே கடன் அட்டைகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு 2022 -23ம் ஆண்டில் ரூ.2,600 கோடி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் நிதி ஆண்டில் வணிகம் மற்றும் மின்னணு வர்தகத்தை ரூபே மற்றும் குறைவான மதிப்பு கொண்ட யுபிஐ மூலம் மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதி தொகை வழங்கப்படும்.

English summary
Indians living abroad will soon be able to use the UPI facility through their international mobile numbers, according to the National Payments Corporation. This facility is available in 10 countries including England and Singapore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X