உ.பி, ம.பியில் குழந்தைகள் இறப்பு விகிதம் ரொம்ப மோசம்.. பாஜக மறைக்கிறது.. விளாசிய ப. சிதம்பரம்!
டெல்லி: பாஜக ஆளும் ம.பி, உ.பி மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எம்பியுமான ப சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக மத்தியில் 2014ல் ஆட்சிக்கு வந்தது. தற்போது 2வது முறையாக மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் இதனை கொண்டாடி வருகின்றனர்.

8 ஆண்டு கொண்டாட்டம்
குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் சாதனைகள், மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து மேற்கொண்ட பணிகள் குறித்து பல்வேறு பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இரட்டை இன்ஜின் ஆட்சி
குறிப்பாக மத்தியிலும், மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்வதை மத்திய பிரதேச முதில்வர் சிவ்ராஜ் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் தங்களை இரட்டை இன்ஜின் ஆட்சி எனக்கூறி வருகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடப்பதால் வளர்ச்சி பணிகள், திட்டங்கள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.

ப சிதம்பரம் விமர்சனம்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ப சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநில பிரச்சனையை சுட்டிக்காட்டி அவர் விளாசியுள்ளார். இதுகுறித்து ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் சரமாரி விமர்சனங்களை வைத்துள்ளார். அதில், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது.

உண்மைகளை புதைப்பது ஏன்?
மத்திய பிரதேசத்தில் 1000 குழந்தைகளில் 43 பேரும், உத்தர பிரதேசத்தில் 1000 குழந்தைகள் பிறந்தால் 38 பேரும் இறக்கின்றனர். இந்த 2 மாநிலங்களில் அதிகமான குழந்தை இறப்பு விகிதம் உள்ளது. இரட்டை இன்ஜின் ஆட்சியால் ஏன் தாய் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லை?. மோடி அரசின் 8 ஆண்டுகளை பாஜக கொண்டாடுகிறது. இந்த கொடூரமான உண்மைகள் ஏன் புதைக்கப்பட்டு மறக்கப்படுகின்றன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications