"ஸ்லீப்பர் செல்கள்".. இந்தியாவில் அதிபயங்கர ரயில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? பரபர தகவல்
டெல்லி: இந்தியாவில் உள்ள சில பகுதிகளில் பாகிஸ்தான் உளவு அமைப்பு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நாட்டின் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. அந்நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையே காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் வர முயல்வதும் அதை இந்திய ராணுவம் முறியடிப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.
இந்தச் சூழலில் தான் நாட்டின் உளவு அமைப்புகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பஞ்சாப் மற்றும் அதன் சுற்றுவட்டார மாநிலங்களில் உள்ள ரயில் பாதைகளைக் குறிவைத்து ஐஎஸ்ஐ எனப்படும் பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் உளவுத்துறை பெரிய சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாதைகளில் செல்லும் சரக்கு ரயில்களைக் குறிவைத்துத் தகர்க்கும் வகையில் ஐஎஸ்ஐ அமைப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள ரயில் டிராக்குகளை குறி வைத்துத் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ அமைப்பு இந்தியாவில் உள்ள தனது ஏனெட்டுகளுக்கு நிதி உதவி அளித்து வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
அதாவது இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஐஎஸ்ஐ அமைப்பு அதிகப்படியான தொகையைச் செலுத்தி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.