கொரோனாவுக்கு முடிவுரை எழுதப்போகும் வேக்சின்.. முதற்கட்ட சோதனை வெற்றி.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்
டெல்லி: மூக்கில் செலுத்தக் கூடிய கொரோனா வேக்சின், வைரஸ் பாதிப்பின் தீவிர தன்மையையும் வைரஸ் பரவுவதையும் கட்டுப்படுத்துவது முதற்கட்ட ஆய்வுகளில் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இருக்கும் சூழலில் கொரோன தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், தற்போது வரை தேவைக்கு ஏற்ப கொரோனா வேக்சின் உற்பத்தி இல்லை. இதனால் பல நாடுகளிலும் வேக்சின் பற்றாக்குறை நிலவி வருகிறது.

கொரோனா வேக்சின்
அதேபோல ஜான்சன் உள்ளிட்ட ஓரிரு வேக்சின்களை தவிர மற்ற தடுப்பூசிகள் அனைத்தும் இரண்டு டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும். இதற்கு அதிக காலம் ஏற்படும். அதேபோல இதனால் ஏற்படும் மருத்துவ கழிவுகளும் அதிகம். இதனால் மருந்து நிறுவனங்கள் பல்வேறு மாற்று வழிகளில் வேக்சின் அளிப்பது குறித்தும் தொடர்ச்சியான ஆய்வுகளை நடத்தி வருகின்றன. அதன்படி பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த லான்காஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மூக்கின் வழியே செலுத்தக் கூடிய கொரோனா வேக்சின் பற்றிய ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

மூக்கில் செலுத்தும் வேக்சின்
அதன்படி முதற்கட்டமாக வௌவால்களுக்கு தாங்கள் உருவாக்கிய வேக்சின்களை செலுத்தியுள்ளனர். அப்போது கொரோனா பாதிப்பு ஏற்படுவதை நாசி மூலம் செலுத்தக் கூடிய இந்த வேக்சின் சிறப்பாகக் கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்தனர். அதேபோல இந்த வேக்சின் மூக்கிலிருந்து வெளேயே வரும் வைரஸ்களையும் குறைக்கிறது. அதாவது இதன் மூலம் வைரஸ் பரவலும் கணிசமாகக் குறையும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல்
எந்த விதமான ஊசிகளும் இல்லாமல் நேரடியாக மூக்கில் செலுத்தக் கூடிய இந்த கொரோனா வேக்சின் மூலம் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா பரவல் என இரண்டையும் நிறுத்த முடிவதாக லான்காஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வேக்சின்கள் உயிரிழப்புகளையும், தீவிர கொரோனா பாதிப்பையும் குறைந்தாலும், வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை அந்த வேக்சிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

முக்கிய சாதனை
ஆனால், மூக்கில் செலுத்தும் வேக்சின் வைரஸ் பரவலையும் தடுத்து வைரஸ் பரவலை எளிதாக முடிவுக்குக் கொண்டு வர உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும், இவை சோதனை கட்டத்திலேயே உள்ளது. மூக்கில் செலுத்தக் கூடிய கொரோனா வேக்சின் குறித்த ஆய்வுகள் உலகின் பல நாடுகளிலும் நடந்து வருகிறது. ஆனால் இவை முதற்கட்ட சோதனையிலேயே உள்ளதால், இவை மக்கள் பயன்பாட்டிற்கு 2022ஆம் ஆண்டிலேயே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

ஏன் முக்கியம்
உலகின் பல நாடுகளிலும் இப்போது டெல்டா கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்தடுத்த அலைகள் ஏற்பட்டு வருகின்றன. மற்ற எந்த உருமாறிய கொரோனாவை விடவும் டெல்டா கொரோனா வேகமாகப் பரவுவதால் அது தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது பயன்பாட்டிலுள்ள வேக்சிகள் வைரஸ் பாதிப்பின் தீவிர தன்மையைக் குறைத்தாலும் வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்துவதில்லை. ஆனால், மூக்கில் செலுத்தும் வேக்சின் வைரஸ் பாதிப்பைத் தடுத்து நிறுத்துவது முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தகுந்த சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications