டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாம இப்போ கொண்டாட போறது 75-வது சுதந்திர தினமா? இல்லை 76-வது சுதந்திர தினமா?.. எது கரெக்ட் தெரியுமா!

Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திர தினத்தை நாட்டில் பலரும் வீட்டில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி வரும் நிலையில், இப்போ கொண்டாட போறது 75-வது சுதந்திர தினமா?.. இல்லை 76-வது சுதந்திர தினமா?..என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி 13-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரையில் என மூன்று நாட்கள் இல்லங்கள் தோறும் தேசியக்கொடியை ஏற்றியும், காட்சிப்படுத்தியும், இதை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

புதிய இந்தியா எழுச்சி பெறுவதை உலக நாடுகள் பார்க்கின்றன.. ஜனாதிபதி திரெளபதி முர்மு சுதந்திர தின உரை! புதிய இந்தியா எழுச்சி பெறுவதை உலக நாடுகள் பார்க்கின்றன.. ஜனாதிபதி திரெளபதி முர்மு சுதந்திர தின உரை!

75-வது சுதந்திர தினமா?

75-வது சுதந்திர தினமா?

இதன்படி நாடு முழுவதும் பரவலாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடிகளை ஏற்றி உள்ளனர். எங்கு பார்த்தாலும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப்பறப்பதை காண முடிந்தது. வாகனங்களில் கூட மூவர்ண கொடி பறப்பதை காண முடிகிறது. நமது தேசபக்தியை ஊட்டும் இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே நாம் கொண்டாட இருப்பது 75-வது சுதந்திர தினமா? அல்லது 76 வது சுதந்திர தினமா என்ற கணித குழப்பமும் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.

75 வார கவுண்டவுன்

75 வார கவுண்டவுன்

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இருந்து விடுதலை பெற்றதன் 75 வது ஆண்டு என்ற புதிய மைல் கல்லை எட்டுவதால் இந்த ஆண்டு மக்கள் மத்தியில் அதிகப்படியான கேள்விகள் எழுந்துள்ளது. குறிப்பாக இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதையொட்டி பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற ஒரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான 75 வார கவுண்டவுனாக இது தொடங்கப்பட்டது.

76 வது சுதந்திர தினமா?

76 வது சுதந்திர தினமா?

இதன் அர்த்தம் என்னவென்றால் ஆகஸ்ட் 15, 2022-ல் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்து, 76-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்பதாக இருந்தது. இதனால், நாம் கொண்டாடப்போவது 75 வது சுதந்திர தினமா? அல்லது 76 வது சுதந்திர தினமா? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்த குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதற்கு தீர்வு கீழே கொடுக்கிறோம் படியுங்கள்...

முதல் சுதந்திரம் 1947-ம் ஆண்டு

முதல் சுதந்திரம் 1947-ம் ஆண்டு

200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் பிடியில் இருந்த இந்தியா, பலரது உயிர்தியாகத்தாலும் பல இன்னல்களுக்கும் பிறகு ஆகஸ்ட் 15 ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. இதன்படி, இந்தியா தனது முதல் சுதந்திர தினத்தை 1948 ஆம் ஆண்டு கொண்டாடியது. 10-வது சுதந்திர தினத்தை 1957 ஆம் ஆண்டிலும் , 20 வது சுதந்திர தினத்தை 1967-லும் 30-வது சுதந்திர தினத்தை 1977 ஆம் ஆண்டிலும் கொண்டாடியது.

எண்ணி பார்த்தால் 76..

எண்ணி பார்த்தால் 76..

தொடர்ச்சியாக 70-வது சுதந்திர தினத்தை 2017 ஆம் ஆண்டில் கொண்டாடியது. எனவே இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை 2022 ஆம் ஆண்டில் தான் கொண்டாட உள்ளது. ஆனால், இந்தியா எத்தனை சுதந்திர தினங்களை கொண்டாடியது என்று நாம் எண்ணினால் அது 76 ஆக இருக்கும். ஏனெனில் நாம் நமது முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தை 1947 ஆம் ஆண்டில் கொண்டாடினோம். எனவே எத்தனையாவது சுதந்திர தினம் என்று பார்த்தால் நாளை 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். எத்தனை முறை கொண்டாடினோம் என்று பார்த்தால் நாளை நாம் 76-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.

English summary
As India celebrates its 75th Independence Day as Azadi Ka Amrit Mahotsav’, is it the 76th Independence Day or the 75th Independence Day? Mathematical confusion has arisen widely among people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X