Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக ஆதரவு ஜெயின்கள் நாடு முழுவதும் திடீர் போராட்டம்-குஜராத், ஜார்க்கண்ட் அரசுகளுக்கு எதிராக ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் வாக்கு வங்கியான ஜெயின்கள் தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் முன்பாக ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் ஜனாதிபதியிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இதேபோல் குஜராத்தின் அகமதாபாத், மகாராஷ்டிராவின் மும்பை உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஜெயின்கள் போராட்டம் நடத்தினர். பாஜக ஆளும் குஜராத், காங்-ஜேஎம்எம் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஜார்க்கண்ட் மாநில அரசுகளுக்கு எதிரான ஜெயின்கள் நடத்திய இப்போராட்டம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Jains protest in Delhi, Gujarat on Shikharji, Palitana temples row

ஜெயின் சமூகம் இந்துமதத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஜெயின்கள் பொதுவாக பாஜகவின் வாக்கு வங்கியாகவே இருந்து வருகின்றனர். குஜராத்தில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு ஜெயின்களின் வாக்குகள் மிக முக்கியமானதாகவும் இருக்கிறது. இந்த நிலையில் ஜெயின்கள், திடீரென நாடு முழுவதும் ஆவேசமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஜெயின்களின் இந்தப் போராட்டம் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் Sammed Shikharjie என்ற வழிபாட்டுத் தலம் ஜெயின்களின் புனித தலங்களில் ஒன்றாக வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இப்புனித தலத்தை சுற்றுலா மையமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி அரசு அறிவித்தது. இதனை ஜெயின்கள் மிக கடுமையாக எதிர்க்கின்றனர்.

அதேபோல் பாஜக ஆளும் குஜராத்தின் பாவ்நகர் மாவட்டம் பாலிதானா, ஜெயின்களின் மற்றொரு மிக முக்கியமான புனிதலம். காசிக்கும் ஹரித்வாருக்கும் எப்படி செல்வது புனிதமாக கருதப்படுகிறதோ அதேபோல் ஜெயின்கள் பாலிதானா செல்வதை வாழ்நாள் கடமையாக கொண்டிருக்கின்றனர்.

பாலிதானாவில் 3,000 படிக்கட்டுகளைக் கடந்து மலைக்குன்று மேல் பல்லாயிரக்கணக்கான சலவைக்கல் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயின்கள், நேர்த்திக் கடன் போல இந்த கோவில்களை கட்டுவித்துள்ளனர். ஜெயின்கள் பாலிதானா மலையில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

அத்துடன் பாலிதானால் ஜெயின் சமூகத்தில் துறவு நிலை மேற்கொள்பவர்களுக்கான மடங்கள் உள்ளன. ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்குமான மடங்கள் உள்ளன. இந்த மடங்களின் துறவு வாழ்வு என்பது நவீன காலத்துக்கு முன்னர் எப்படி துறவு நிலை வாழ்ந்தார்களே அதேபோல கடைபிடிக்கப்படுகிற இடம்.

இம்மடங்களில் துறவிகளாக இணைந்திருப்பவர்கள், பொது இடங்களில் சமைக்கப்படும் பத்திய சாப்பாட்டை நேரில் சென்றுதான் வாங்க வேண்டும். இந்த உணவுகளை கொண்டு வருவதற்கு என தனியான ஒரு மண் பாத்திரம் வழங்கப்பட்டிருக்கும். ஆண்களும் பெண்களும் தலைமுடியை மழித்தாக வேண்டும். தலைமுடியை மழிப்பதற்கு கருவிகளை பயன்படுத்துவது இல்லை. ஒருசில மூலிகைகளைக் கொண்டு கைகளால் முடிகளை பிடுங்கி மழித்துக் கொள்கிற பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த துறவிகளாக இருப்பவர்கள் நாள்தோறும் 3,000 படிக்கட்டுகள் ஏறி இறைவனை வழிபட்டு கீழே வருவது கடமையாக வைத்துள்ளனர். காலையிலும் மாலையிலும் இப்படி படியேறி வழிபாடு நடத்துவதை பாலிதானாவில் காண முடியும். மேலும் பாலிதானா, புனித நகரமாக கருதப்படுவதால் இங்கு மது, மாமிச விற்பனைக்கு அனுமதி இல்லை. குஜராத்தில் ஏற்கனவே மதுவிலக்கு அமலிலும் உள்ளது. ஆனாலும் கள்ளச்சாராய விற்பனையும் தடுக்கப்பட்டிருக்கிறது.

Jains protest in Delhi, Gujarat on Shikharji, Palitana temples row

அண்மையில் குஜராத் அரசு, ஜெயின்களின் பாலிதானா மலை பகுதியில் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது; இதனால் ஜெயின்கள் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் மது விற்பனையும் சட்டவிரோதமாக நடைபெறுகிறது.இதனை ஆளும் குஜராத் பாஜக அரசு தடுக்கவில்லை என்பது புகார். இந்த இருபிரச்சனைகளை முன்வைத்து ஜெயின்கள் ஒருசேர நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இந்த விவகாரங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு உறுதியான முடிவெடுக்காமல் போனால் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கடும் பாதிப்பு உருவாகும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+