டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய இந்தியா இப்படித்தான் இருக்கும்.. வரைபடத்தில் மாற்றம்.. வெளியிட்டது மத்திய அரசு!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களின் வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதிய யூனியன் பிரதேசங்கள் முறையாக உருவாக்கப்பட்டு, அவற்றின், முதல் லெப்டினன்ட் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுவிட்ட, இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

Jammu Kashmir and Ladakh new map released

முன்னாள் மத்திய செலவீன செயலாளர் கிரிஷ் சந்திரா முர்மு, ஜம்மு-காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராகவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரான ராதா கிருஷ்ணா மாத்தூர் லடாக்கின் முதல் துணை நிலை ஆளுநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

1947 ஆம் ஆண்டில் முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பின்வரும் 14 மாவட்டங்களைக் கொண்டிருந்தது - கத்துவா, ஜம்மு, உத்தம்பூர், ரியாசி, அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மீர்பூர், முசாபராபாத், லே மற்றும் லடாக், கில்கிட், கில்கிட் வஸாரத் பழங்குடி மண்டலம்.

இன்றைய அறிவிப்பின்படி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், முந்தைய ஒருங்கிணைந்த காஷ்மீரில் இருந்த கார்கில் மற்றும் லே மாவட்டங்கள் இருக்காது. அவை, லடாக் யூனியன் பிரதேசத்தின்கீழ் வரும்.

தமிழகம் முழுக்க.. 34 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்.. பல மாவட்டங்களுக்கு புது எஸ்பிக்கள்தமிழகம் முழுக்க.. 34 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்.. பல மாவட்டங்களுக்கு புது எஸ்பிக்கள்

முன்பு காஷ்மீர் இந்தியாவின் தலைப்பகுதிபோல காட்சியளிக்கும். இப்போது தலையிலுள்ள தலைப்பாகை போல லடாக் தோற்றமளிக்கிறது. கீழேயுள்ள பகுதிதான் காஷ்மீர்.

English summary
Heres the New Political Map of India specifying the newly marked boundaries of the Union Territories of Jammu and Kashmir and Ladakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X