டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜப்பானில் கொரோனா கோரத் தாண்டவம்- ஒருநாள் பாதிப்பு 1,07,465; 292 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. உலக நாடுகளில் ஜப்பானில்தான் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மரணங்களும் அதிகரித்து வருகிறது.

2019-ம் ஆண்டின் இறுதியில் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பெரும் பேரழிவுக்குள்ளாக்கி இருக்கிறது கொரோனா வைரஸ்.

Japan reports 1,07,465 new coronavirus cases; 292 deaths

கடந்த 3 ஆண்டுகளில் உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,47,80,813; உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 63,67,55,497; உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 66,96,881.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு பரவல் சற்று ஓய்ந்திருந்தது. ஆனால் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதி உச்சத்தைத் தொட்டது. இதனையடுத்து பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. உலகம் முழுவதும் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,96,827; உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா மரணங்கள் 747; ஜப்பானில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,07.465; 292 பேர் பலி. தென்கொரியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 62,926; 61 பேர் பலி. 2021-ம் ஆண்டை ஒப்பிடுகையில் ஜப்பானில் கொரோனா பாதிப்பு 16 மடங்கு அதிகமாகும்.

இந்தியாவில் நேற்று காலை நிலவரம்: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.10 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.13 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.40 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.

 மின்னல் வேகம்.. மோசமான பாதிப்பு.. அமெரிக்காவை அலறவிட்ட புது வகை கொரோனா.! இந்தியாவிலும் நுழைந்தது மின்னல் வேகம்.. மோசமான பாதிப்பு.. அமெரிக்காவை அலறவிட்ட புது வகை கொரோனா.! இந்தியாவிலும் நுழைந்தது

கடந்த 24 மணி நேரத்தில் 91,732 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 3,653 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.01 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.8 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,44,029 பேர்.

கடந்த 24 மணி நேரத்தில் 226 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.12% வாராந்திர பாதிப்பு விகிதம் 0.15% இதுவரை மொத்தம் 91.07 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,87,983 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

English summary
Japan has reported 107,465 new coronavirus cases. The number of coronavirus deaths reported was 292.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X