டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா மரண வழக்கு: புதிய ஆணையம் அமைப்பா?- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் வாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: தங்கள் நற்பெயருக்கு ங்கம் விளைவிக்கும் வகையில் விசாரணை ஆணைய நடைமுறைகள் முழுதுமாக தடை கோரிய அப்போலோ வழக்கில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மாற்றங்கள் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது, வழக்கு தொடர் அப்போலோவுக்கு உரிமை இல்லை, நிபுணர்கள் சேர்க்க கோரினால் அதை செய்யலாம், ஒட்டுமொத்த ஆணையம் குறித்து அப்போலோ முடிவெடுக்க முடியாது என அரசுத்தரப்பு பதிலில் தெரிவித்தது.

சிதம்பரம் கோர்ட்டுக்கு சூர்யா வரும்போது ஒரு வன்னியர் உதைத்து ரூ.1லட்சம் வாங்குவார்-பகிரங்க மிரட்டல்சிதம்பரம் கோர்ட்டுக்கு சூர்யா வரும்போது ஒரு வன்னியர் உதைத்து ரூ.1லட்சம் வாங்குவார்-பகிரங்க மிரட்டல்

ஒருதலைப்பட்சமான ஆறுமுக சாமி ஆணையம்..அப்போலோ நிர்வாகம் வழக்கு

ஒருதலைப்பட்சமான ஆறுமுக சாமி ஆணையம்..அப்போலோ நிர்வாகம் வழக்கு

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை கமிஷனில் முறையான மருத்துவ நிபுணர்கள் இல்லை, அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்த மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய நிபுணத்துவம் பெற்றவர்கள் தேவை, தங்கள் நற்பெயருக்கு ங்கம் விளைவிக்கும் வகையில் விசாரணை ஆணைய நடைமுறைகள் உள்ளதால் விசாரணைக்கு தடைகோரிய அப்பல்லோ நிர்வாகத்தின் மனு மீதான விசாரணையில் தமிழக அரசு வாதத்தில் ஆணையத்தை எதிர்த்து வழக்கு தொடர அப்போலோவுக்கு உரிமையில்லை, நிபுணர்கள் வேண்டுமானால் சேர்க்கத்தயார் என்று பதிலளித்தது.

கடந்த முறை வாதம்

கடந்த முறை வாதம்

அப்பல்லோ தரப்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிடுகையில், ஆணையம் தொடர்ந்து ஒருதலைபட்சமாகவே விசாரணை நடத்துகிறது, எனவே தான் இந்த ஆணைய விசாரணை கூடாது என கோருகிறோம். எனத்தெரிவித்தார்.

தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி

தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி

நீதிபதிகள் குறுக்கிட்டு, "தமிழகத்தில் அரசு தற்போது மாறியுள்ளது, புது அரசு இன்னும் பழைய நிலைப்பாட்டிலேயே தான் இருக்கிறீர்களா?" என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் "ஆணையம் விட்டுப்போன விசாரணையை அந்த இடத்தில் இருந்து தொடர்ந்து நடத்தத்தான் விருப்பம்" எனத் தெரிவித்தார்.

ஆணையத்தில் மாற்றம் அமைக்காரசு விரும்புகிறதா நீதிபதிகள் கேள்வி

ஆணையத்தில் மாற்றம் அமைக்காரசு விரும்புகிறதா நீதிபதிகள் கேள்வி

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், " விசாரணை ஆணையத்தில் ஏதேனும் மாற்றங்களை செய்ய புது அரசு விரும்புகிறதா? எனக் கேட்டனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், இது தொடர்பாக தமிரக அரசிடம் கேட்டு உரிய பதில் சொல்வதாக தெரிவித்தார்.

ஒருதலைப்பட்சமாக நடக்கவில்லை- ஆறுமுக சாமி ஆணையம்

ஒருதலைப்பட்சமாக நடக்கவில்லை- ஆறுமுக சாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையமும் அளித்த பதிலில், தமிழக அரசு மற்றும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடக்கிறது என்ற வாதத்தை நிச்சயம் ஏற்க முடியாது, ஆணையத்தில் மாற்றங்கள் செய்யக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

143 அமர்வுகள் இருந்து விசாரிக்கப்பட்டுள்ளது, எனவே ஏதேனும். மாற்றம் செய்யும்போது அதற்கான சரியான காரணங்கள் மிகமுக்கியம். விசாரணை ஒரு தலைபட்சமாக நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஆணையம் மீது அப்பல்லோ நிர்வாகம் கூறியது சாதாரண குற்றச்சாட்டுகள் அல்ல, அதற்கான பதில்களும் எங்களிடம் உள்ளது எனத் தெரிவித்தது.

அப்பல்லோ நிர்வாகம் கடும் வாதம்

அப்பல்லோ நிர்வாகம் கடும் வாதம்

இதற்கு பதிலளித்த அப்போலோ நிர்வாகம், ஆறுமுக சாமி ஆணையம் தனது நற்பெயர் குறித்து கூறுகின்றனர் ஆனால் அப்பல்லோவின் நற்பெயர் குறித்து அவர்கள் யோசிக்கவில்லை. அதனால் தான் அனைத்து தகவல்களையும் ஆணையம் ஊடகங்களுக்கு கசியவிட்டது. எனத்தெரிவித்த வழக்கறிஞர், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தேதி வாரியாக பட்டியலிட்டார்.

நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேலையில் ஈடுபட்ட ஆணையம்

நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேலையில் ஈடுபட்ட ஆணையம்

பாகுபாடு, ஒருதலைபட்சமாக நடப்பது இயற்கை நீதிக்கு எதிரானது. ஒருவரின் தற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது அவருக்கான அடிப்படை உரிமைக்கு களங்கம் விளைவிப்பது ஆகும், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பும் உள்ளது. ஏனெனில் நற்பெயர் என்பது ஒருவர் வாழ்வதற்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையோடு தொடர்புடையது ஆகும். எனவே நற்பெயருக்கு களங்கம் விளைவிபலபது ஒருவரின் அடிப்படை உரிமைக்கு களங்கம் விளைவிப்பதாகும். அதை தான் ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்துக்கு எதிராக நடத்தியுள்ளது

ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட ஆணையம் - அப்போலோ நிர்வாகம் குற்றசாட்டு
பாகுபாடுடன் நடந்து, ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் ஒருவரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுமேயானால், அதற்கான தீர்வு என்பது மொத்த வழக்கு விசாரணையையும் ரத்து செய்வதாகும், அதுவே பாதிக்கப்பட்டவருக்கான இயற்கை நீதியாகும்

அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்த மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய நிபுணத்துவம் பெற்றவர்கள் தேவை. ஆனால் ஆணையம் 4 பேர் கொண்ட ஒரு குழுவிடமே கருத்து கேட்டது, இது ஏற்க முடியாத ஒன்று.

 மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆணையம் முன் மருத்துவ அறிக்கை அளித்து பயனில்லை

மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆணையம் முன் மருத்துவ அறிக்கை அளித்து பயனில்லை

அந்த அறிக்கை பல்வேறு மருத்துவ நிபுணத்துவம் அடங்கியது ஆகும். அதை ஆய்வு செய்ய உரிய நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குழு தேவை, ஆனால் அது போன்ற நிபுணர்கள் குழு ஆணையத்திடம் இல்லை. அப்படி இருக்கையில் எவ்வாறு அந்த அறிக்கைகளை ஆய்வு செய்து உரிய முடிவுக்கு வர முடியும்.

இந்த விவகாரத்தில் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது, ஒரு தலைபட்சமாக ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது, மருத்துவமனைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது, உரிய நிபுணர்கள் இல்லாமல் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் திட்டமிட்டு ஒருவரின் அடிப்படை உரிமைக்கு களங்கம் விளைவிப்பது ஆகும். எனவே இந்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை ரத்து செய்ய வேண்டும்" என அப்பல்லோ நிர்வாகம் தரப்பு வாதம் செய்தது.

இந்த விவகாரத்தில் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது, ஒரு தலைபட்சமாக ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது, மருத்துவமனைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது, உரிய நிபுணர்கள் இல்லாமல் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் திட்டமிட்டு ஒருவரின் அடிப்படை உரிமைக்கு களங்கம் விளைவிப்பது ஆகும். எனவே இந்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை ரத்து செய்ய வேண்டும்" என அப்பல்லோ நிர்வாகம் தரப்பு வாதம் செய்தது.

 தமிழக தரப்பு பதிலடி

தமிழக தரப்பு பதிலடி

தமிழக அரசு தரப்பு வாதத்தில் இந்த வழக்கை இத்தனை நாள் விசாரிக்க தேவையில்லாத ஒன்று, இத்தனை வாதம் வைத்தும் எதையும் புதிதாக கூறவில்லை, சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர் எனக் குற்றம் சாட்டியது.

 மீண்டும் ஆரம்பித்த விசாரணை

மீண்டும் ஆரம்பித்த விசாரணை

இதையடுத்து வழக்கு விசாரணை வரும் நவ 23(இன்று) ஒத்திவைக்கப்பட்டது. விசாரணை இன்று காலை மீண்டும் நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

இருநபர் விசாரணை ஆணையம் அமைக்கத்தயார்-தமிழக அரசு

இருநபர் விசாரணை ஆணையம் அமைக்கத்தயார்-தமிழக அரசு

இன்று விசாரணை தொடங்கியது அப்போது நீதிபதிகள் ஜெயலலிதா விசாரணை ஆணையத்தை மாற்ற ஏதாவது ஆட்சேபனை உள்ளதா என்று கேட்டதற்கு வழக்கில் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த தவே கடுமையான வாதத்தை வைத்தார். ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிக்க அப்போலோவிற்கு உரிமை இல்லை, அது உண்மைக்கண்டறியும் குழு, நிபுணர் குழு அல்ல என்று வாதிட்டார்.

இரு நபர் ஆணையம் அமைக்கப்படுமா?

இரு நபர் ஆணையம் அமைக்கப்படுமா?

ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி ஆணைய விசாரணை 95% முடிவடைந்துள்ளது. ஆகவே அப்போலோ தரப்பிலிருந்து ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஆஜராக உத்தரவிடலாம் என்றும் தெரிவித்தார். தமிழக அரசு இருநபர் ஆணையம் அமைக்க ஒப்புக்கொண்டதால் இருநபர் ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமா என்பது வாதத்தின் முடிவில் தெரிய வரும்.

 அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் துபேவின் வாதம்

அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் துபேவின் வாதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுக சாமி ஆணைய விசாரணைக்கு தடைகோரிய அப்பல்லோ தொடர்ந்த வழக்கு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞரின் வாதம் வருமாறு:

உண்மை கண்டறியும் குழு தானே தவிர் ஆணையம் நிபுணர் குழு அல்ல அப்போலோ வாதம் தமிழகம் நிராகரிப்பு

உண்மை கண்டறியும் குழு தானே தவிர் ஆணையம் நிபுணர் குழு அல்ல அப்போலோ வாதம் தமிழகம் நிராகரிப்பு

ஆணையம் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டது என்பதை ஏற்க முடியாது. ஆணையம் இதுவரை 50 அப்பல்லோ மருத்துவர்களை விசாரித்துள்ளது. ஆணையம் உண்மை கண்டறியும் குழு தானே தவிர அது நிபுணர் குழு அல்ல, அதில் மருத்துவர்கள், நிபுணர்கள் இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை, ஏனெனில் விசாரணைக்கு ஆஜராகும் மருத்துவர்கள் சொல்வதை பதிவு செய்து அதை அரசிடம் கொடுப்பது மட்டும் தான் ஆணையத்தின் வேலை

 நல்ல மருத்துவமனை அதற்காக ஆணையத்தை குற்றஞ்சாட்டக்கூடாது

நல்ல மருத்துவமனை அதற்காக ஆணையத்தை குற்றஞ்சாட்டக்கூடாது

அப்பல்லோ ஒரு நல்ல மருத்துவமனை, அதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதற்கான ஆணைய விசாரணை ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறது என்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் மனு மீது மனுவை தாக்கல் செய்து ஆணையத்தின் செயல்பாட்டை தடுக்கவே அப்பல்லோ முயற்சிக்கிறது

தவறு இருந்தால் திருத்திக்கொள்ளத்தயார்

தவறு இருந்தால் திருத்திக்கொள்ளத்தயார்

மேலும், ஆணையத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்ய தயாராக இருக்கிறோம். ஆணையத்தை விரிவாக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னால் அதனை செய்வதற்கும் தயாராக உள்ளோம். ஆனால் ஆணையம் செயல்படவே கூடாது என சொல்லுவதை ஏற்க முடியாது.

மருத்துவ நிபுணர்களை சேர்க்கவும் தயார்

மருத்துவ நிபுணர்களை சேர்க்கவும் தயார்

ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் சேர்ப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். ஏனெனில் மறைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு எடுத்து கூறுவது மிக முக்கியம். ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்ப்பது குறித்த கருத்துகளும் யோசனைகளும் முன்வைக்கப்படுகிறது,ஆனால் அது எல்லாம் கடைசி வாய்ப்பு தான்.

அதற்கு முன்பாக தற்போதைய ஆணையம் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதா என்பதை கூற வேண்டும். முதலில் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டதா என்பதை முதலில் நிரூபிக்கட்டும். அதன் பின்னர் ஆணையத்துக்கு வேறு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக முடிவெடுக்கலாம்.

வெளிப்படைத்தன்மைக்காகத்தான் ஆணையம் உழைக்கிறது

வெளிப்படைத்தன்மைக்காகத்தான் ஆணையம் உழைக்கிறது

என்ன மருந்துகள் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்டது, என்ன சிகிச்சையை வழங்கியது உள்ளிட்ட அனைத்தும் வெளிப்படையாக தெரியவேண்டும் அதை தான் ஆணையம் செய்து வருகிறது, அதனால் ஆணைய செயல்பாடுகளை முடக்க கூடாது.


ஒரு ஆண்டு ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தியது, அப்பல்லோவின் 50 மருத்துவர்கள் விசாரிக்கப்பட்டார்கள். அதன்பிறகு வந்து ஆணையம் செயல்பட கூடாது என்றார்கள். அப்படியெனில் ஒரு ஆண்டாக அப்பல்லோ என்ன செய்து கொண்டிருந்தது?, ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் அரசின் முடிவு, அதில் கூட ஆணையம் தலையிட முடியாது.

அப்பல்லோவின் கோரிக்கைகள் பரிசீலனைக்கு உட்பட்டது கிடையாது. ஆணையத்துக்கு இல்லாத அதிகாரத்தை எல்லாம் செய்ய அப்பலோ கேட்கிறது. எனவே அப்பல்லோவின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வழக்கறிஞர் வாதம் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதன் மீது விவாதம் நடக்குமா? " எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த தமிழக அரசுத்தரப்பு, நிச்சயம் விவாதம் நடக்கும் என தெரிவித்தது.

அப்போது ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சட்டசபையில் ஆளும் அரசும் கேள்வி கேட்கும் முடிவெடுக்கும்

சட்டசபையில் ஆளும் அரசும் கேள்வி கேட்கும் முடிவெடுக்கும்

இதற்கு பதிலளித்த தமிழக தரப்பு வழக்கறிஞர், "எதிர்கட்சிகள் மட்டுமல்ல, அரசும் கூட கேள்விகள் கேட்கும், அந்த விவாதத்தில் கலந்து கொள்ளும், அறிக்கை தொடர்பாக விவாதித்து தான் அரசு என்ன நடவடிக்கை என்பது முடிவுசெய்யப்படும். குறிப்பாக கிரிமினல் நடவடிக்கையா ? அல்லது சிவில் நடவடிக்கையா? அல்லது ஆணையத்தின் முடிவுகளை நிராகரிப்பதா ? என்பது முடிவு செய்யப்படும்.

அப்போலோ அவசரப்படுகிறது-தமிழக அரசு
ஆணையத்தின் அறிக்கை மீது முடிவெடுக்கப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசு வழக்கு பதிவு செய்த பின்னர் மட்டுமே மருத்துவமனையால் நீதிமன்றத்தை நாட முடியும். ஆனால் தற்போது விசாரணை நிலையிலேயே ஆணையத்தை எதிர்த்து மனுதாக்கல் செய்ய முடியாது" என தமிழக அரசின் வாதத்தை நிறைவு செய்தார்.

புதிய ஆணையம் இல்லை தமிழக அரசு திட்டவட்டம்

புதிய ஆணையம் இல்லை தமிழக அரசு திட்டவட்டம்

ஆறுமுக சாமி ஆணையத்துக்கு மாற்றாக புதிய ஆணையம் எதுவும் அமைக்கும் எண்ணமில்லை என தமிழக அரசு திட்டவட்டமாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆறுமுக சாமி ஆணையமே தொடரும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது.

English summary
TN Govt Reply to Supreme Court In Jayalaitha's Death Case : தங்கள் நற்பெயருக்கு ங்கம் விளைவிக்கும் வகையில் விசாரணை ஆணைய நடைமுறைகள் முழுதுமாக தடை கோரிய அப்போலோ வழக்கில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மாற்றங்கள் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது, வழக்கு தொடர் அப்போலோவுக்கு உரிமை இல்லை, நிபுணர்கள் சேர்க்க கோரினால் அதை செய்யலாம், ஒட்டுமொத்த ஆணையம் குறித்து அப்போலோ முடிவெடுக்க முடியாது என அரசுத்தரப்பு பதிலில் தெரிவித்தது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X