ஜார்க்கண்ட் சுரங்க முறைகேடு-முதல்வர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு? தேர்தல் ஆணையம் பரிந்துரை
டெல்லி/ராஞ்சி: தமது பெயரில் சுரங்க ஒதுக்கீடு உரிமம் பெற்ற ஜார்க்கன்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க
அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவியும் பறிபோகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தமது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றிருந்தார் ஹேமந்த் சோரன். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் மனு கொடுத்தது.
இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கும் பரிந்துரையை ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி பறிபோகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தம்மை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஹேமந்த் சோரன் கூறுகையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரை அப்படியே பாஜகவினர் எழுதியதைப் போலவே இருக்கிறது. ஆளுநர் இன்னமும் எனக்கு அந்த பரிந்துரையை அனுப்பவும் இல்லை. அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார்
இந்த பரபரப்புகளுக்கு நடுவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தமது எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை ராஞ்சியில் இன்று மாலை கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை தொடர்பாக இதுவரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவும் இல்லை. கடந்த சில நாட்களாக தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றிருந்த ஆளுநர், இன்றுதான் ராஞ்சி திரும்பி இருந்தார்.
இன்னொரு பக்கம், ஜார்க்கண்ட் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்கிறது பாஜக. இது தொடர்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறுகையில், தார்மீக அடிப்படையில் ஹேமந்த் சோரன் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஜார்க்கண்ட் சட்டசபை கலைக்கப்பட வேண்டும். மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications