பிபிசியின் ஆவணப்படத்திற்கு 'நோ'! சோஷியல் மீடியாவை தொடர்ந்து மாணவர்களுக்கும் கட்டுப்பாடு! ஜேஎன்யு கறார்
டெல்லி: குஜராத் கலவரம் குறித்து சமீபத்தில் பிபிசி வெளியிட்டிருந்த 'India: The Modi Question' எனும் ஆவணப்படத்தை ஜேஎன்யு(JNU) பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திரையிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. மட்டுமல்லாது இதனை திரையிடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் கோத்தராவில் ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதனையடுத்து வெடித்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 2,500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கலவரம் நடந்தபோது அம்மாநில முதலமைச்சராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு வகித்திருந்தார்.
இந்நிலையில் இக்கலவரம் குறித்து இங்கிலாந்தின் பிபிசி செய்தி ஊடகம் ஆவணப்படம் ஒன்றை கடந்த 17ம் வெளியிட்டிருந்தது. இதில் இக்கலவரத்திற்கு அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தது. அதாவது கலவரத்தை தடுக்க போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருந்தாக பிபிசி தனது ஆவணப்படத்தில் குறிப்பிட்டிருந்தது.

எதிர்ப்பு
இந்த படத்திற்கு மத்திய அரசு தரப்பிலும் பாஜக தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் நீதிபதிகள், தூதரக அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் என 300க்கும் மேற்பட்ட பிரபலங்கள், அரசு முன்னாள் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து இந்த ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், "இந்த ஆவணப்படம் பாரபட்சமாக இருக்கிறது. இந்திய சுதந்திரத்தின் அடித்தளத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. கலவரத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உள்நோக்கத்துடன்
இந்த ஆவணப்படம் எங்களது நாட்டின் தலைவருக்கு எதிராக உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு வேண்டுமென்றே திரித்து வெளியிடப்பட்டுள்ள ஆவணப் படங்களை ஒருபோதும் ஏற்க முடியாது" என்று கூறியுள்ளனர். மற்றொருபுறம் இந்த ஆவணப்பட வீடியோக்கள், கருத்துக்களை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவையடுத்து டிவிட்டர், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஆவணப்பட வீடியோக்கள் மற்றும் அது சார்ந்த பதிவுகளை நீக்கி வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 9 மணியளவில் இந்த ஆவணப்படம் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் திரையிட இருந்தது. இதற்கு தற்போது பல்கலை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

ஜேஎன்யு
ஜேஎன்யு எஸ்யு (JNU SU) சார்பில் இந்த திரைப்படம் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து பல்கலை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜேஎன்யு எஸ்யு (JNU SU) எனும் மாணவர் குழு இன்று (ஜன.24) 'India: The Modi Question' எனும் ஆவணப்படத்தை பல்கலை வளாகத்தில் திரையிட உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த நிகழ்வுக்கு பல்கலை நிர்வாகத்திடமிருந்து எவ்வித முன் அனுமதியும் பெறப்படவில்லை. இவ்வாறான அங்கீகாரமற்ற செயல்பாடு பல்கலையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர் குலைக்கும். எனவே சம்பந்தப்பட்ட மாணவர் குழு இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

இரண்டாம் பாகம்
ஆவணப்படம் திரையிடப்படக்கூடாது என்று அறிவுறுத்தப்படுத்தப்படுகிறார்கள். ஒரு வேளை இந்த உத்தரவை பின்பற்றவில்லையெனில், பல்கலைக்கழக விதிகளின்படி உரிய கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளது. ஏற்கெனவே சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த ஆவணப்படத்தை நீக்கி வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது ஜேஎன்யு பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications