டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாற்று தருணம்.. நாட்டின் முதல் லோக்பால் தலைவராக பதவியேற்றார் பினாகி சந்திரகோஷ்

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் லோக்பால் தலைவராக பதவியேற்றார் பினாகி சந்திரகோஷ்- வீடியோ

    டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ், நாட்டின் முதல் 'லோக்பால்' தலைவராக இன்று பதவியேற்றார்.

    ஊழல் ஒழிப்பு அமைப்பான லோக்பால் சட்டம், 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்றது. ஐந்தாண்டுகளாகிவிட்ட நிலையில், முதல் முறையாக லோக்பால் தலைவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

    Justice Pinaki Ghose sworn in as first Lokpal of India

    லோக்பால் மத்திய அரசாலும், மற்றும் லோக்ஆயுக்தாக்கள் மாநில அரசுகளாலும் அமைக்கப்பட வேண்டியது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை இந்த அமைப்புகள் விசாரிக்கும். 2013ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. 2014 ஜனவரி 1ம் தேதி குடியரசு தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார்.

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், லோக்பால் தலைவருக்கு இன்று, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    கட்டிய தாலியை முத்துச்செல்வி உள்ளே ஒளிச்சு வக்கிறாளே.. அப்ப கண்ணன் யாருக்கு? கட்டிய தாலியை முத்துச்செல்வி உள்ளே ஒளிச்சு வக்கிறாளே.. அப்ப கண்ணன் யாருக்கு?

    பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் அடங்கிய உயர்மட்ட தேர்வு குழு, லோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷை நியமித்தது.

    2013ம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பினாகி சந்திரகோஷ், 2017ம் ஆண்டு மே மாதம், ஓய்வு பெற்றார். லோக்பால் தலைவராகுவதற்கு முன்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக பதவி வகித்தார்.

    பல்வேறு காரணங்களால் லோக்பால் தலைவரை நியமிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Justice Pinaki Ghose on Saturday took oath as the first Lokpal of India — the national anti-corruption ombudsman. Prime Minister Narendra Modi, President Ram Nath Kovind, Vice-President M Venkaiah Naidu and Chief Justice of India Ranjan Gogoi were present on the occasion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X