ஓட்டு எண்ணுவதற்கு முன்பாக இவிஎம் இயந்திரங்களை சரிபார்ப்பது எப்படி? தெளிவாக விளக்கிய கபில் சிபல்!
டெல்லி: வாக்கு எண்ணிக்கையின்போது, இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பதை கண்டறியும் வழிகளை விளக்கி உள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவருமான கபில் சிபல்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக 488 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது முதல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவிஎம் இயந்திரங்களை முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்ட நிலையில், இவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிர முடியாது என மறுத்துவிட்டது சுப்ரீம் கோர்ட்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே தேர்தல் முடிவுகளை ஆர்வத்தோடு எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவரும், மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பியுமான கபில் சிபல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த விதமான முறைகேடு செய்தாலும், அதை எப்படி அடையாளம் காண்பது என முக்கிய ஆலோசனைகளை வழங்கி உள்ளார் கபில் சிபல். வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) திறக்கப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களின் முகவர்களுக்கும் பல்வேறு தகவல்களை அளித்துள்ளார் கபில் சிபல்.
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும், முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கவும், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை கண்டறியவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு கபில் சிபல் அறிவுறுத்தி உள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதா என்பதை அடையாளம் காண வாக்குச்சாவடி முகவர்களுக்கு கபில் சிபல் கூறியுள்ள டிப்ஸ் பின்வருமாறு:
1. ஜூன் 4ஆம் தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு விழிப்பாக இருந்து கீழ்காணும் நடைமுறைகளை செய்ய வேண்டும்.
2. வாக்குப்பதிவு இயந்திரம் எந்த நேரத்தில் திறக்கப்படுகிறது என்பதை குறித்துக்கொள்ள வேண்டும்.
3. கட்டுப்பாட்டு கருவி எண், வாக்குப்பதிவு இயந்திர எண், விவிபாட் இயந்திர அடையாள எண் என அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

4. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெரியும் தேதி, நேரத்தையும், அன்றைய நேரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது வேறுபட்டால் முன்பே இயந்திரம் திறக்கப்பட்டு இருக்கலாம் என அர்த்தம்.
5. இவிஎம் இயந்திரத்தில் காட்டும் பதிவான வாக்குகள் விவரத்தை கவனமாகப் பார்த்து குறித்துக்கொள்ள வேண்டும். எண்ணும்போது அதிக வாக்குகள் இருக்கும்போது, மீண்டும் பிரச்சனை வரலாம்.
6. இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே இவிஎம் இயந்திரத்தில் உள்ள "ரிசல்ட்" என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
இவ்வாறு வாக்கு எண்ணிக்கையின் போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் அடங்கிய ஒரு சார்ட்டையும் காட்டி விளக்கி உள்ளார் கபில் சிபல்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications