டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கப்பா, டெல்டா மட்டுமல்ல ஆல்பா,பீட்டா,காமா...உருமாறிய வைரஸ்கள் - இன்னும் என்னென்ன வருமோ

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு டெல்டா, கப்பா என புதிய பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. இது தவிர ஆல்பா, பீட்டா, காமா என உருமாறிய வைரஸ்களுக்கு பெயர் சூட்டியது உலக சுகாதார அமைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா, கோவிட் 19 என்று 2019ஆம் ஆண்டு அழைக்கப்பட்டு வந்த நிலையில் தப்போது உருமாறிய வீரியமான கொரோனா வகைகளுக்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, கப்பா என கிரேக்க பெயர்களை சூட்டி அழைக்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரசுக்கு 'கப்பா' என்றும், 2வதாக கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரஸுக்கு 'டெல்டா' என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

வைரஸ் கண்டறியப்பட்ட நாட்டின் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் கிரேக்க எழுத்துக்கள் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வேரியண்ட் பி.1.617 உருமாறிய வைரஸ் ஆகும். இது மூன்றாக உருமாறும் தன்மை உடையது என்றும் தெரிவித்துள்ளது.

சி.டி. மணி, மன்னார்குடி பேராசிரியர்...9 ஆண்டுகளாக நீடிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு மர்மங்கள்சி.டி. மணி, மன்னார்குடி பேராசிரியர்...9 ஆண்டுகளாக நீடிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு மர்மங்கள்

கொரோனா என்ற சொல் லத்தீன் மொழி சொல்லலாகும். இதற்கு மலர் மகுடம் என்று அர்த்தம். சீனாவில் 2019ஆம் ஆண்டில் பரவிய புதிய வைரஸ், கொரோனாவின் 7வது இனமாகும். இந்த வைரஸ் முந்தைய கொரோனா வைரஸ்களை விடவும் அபாயகரமாகதாக உள்ளது. இது தற்போது உருமாறி அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. அதற்கு உலக சுகாதார அமைப்பு பெயர்கள் சூட்டியுள்ளது.

உருமாற்றம் அடைந்த கொரோனா

உருமாற்றம் அடைந்த கொரோனா

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு இந்தியாவின் பெயரை முதலில் வைத்து அழைக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு டெல்டா, கப்பா என கிரேக்க எழுத்துகளை உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களாக அறிவித்துள்ளது.

பெயர் வைத்த ஹூ

பெயர் வைத்த ஹூ

பி.1.617.2 உருமாறிய கொரோனா வைரஸை இந்தியாவில் உருவான கொரோனா வைரஸ் என்று ஊடகங்கள் அழைக்கவும், பிற நாடுகள் அழைக்கவும் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. உலக சுகாதார அமைப்பு அவ்வாறு குறிப்பிடாதபோது இந்தியாவின் பெயரை வைரஸ் உடன் சேர்த்து குறிப்பிடுவது சரியல்ல, ஆதாரமற்ற வகையில் அவ்வாறு அழைக்கக் கூடாது என்று கண்டித்தது. இந்தியாவின் பெயரை வைரஸ் உடன் சேர்த்து அழைப்பதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு, உலக சுகாதார அமைப்பிடம் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து இரண்டு புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

பெயர் வைத்த ஹூ

பெயர் வைத்த ஹூ


உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் தனது ட்விட்டர் பக்கத்தில், உருமாறிய கரோனா வைரஸை எளிதாகக் கண்டறியும் வகையில், அடையாளப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. ஆனால், அதன் அறிவியல் பூர்வமான பெயர் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு வைரஸ்கள்

இரண்டு வைரஸ்கள்

பொதுத் தளத்தில் விவாதிக்கவும், அடையாளப்படுத்தவும் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி பி.1.617.1 வகை வைரசுக்கு கப்பா என்றும் பி.1.617.2 வகை வைரசுக்கு டெல்டா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு வைரஸ்களும் முதன்முதலில் இந்தியாவில் தோன்றியவை என பதிவிட்டுள்ளார்.

புதுப்புது வைரஸ்கள்

புதுப்புது வைரஸ்கள்

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் கொரோனாவுக்கு பீட்டா என்றும் பிரேசில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு காமா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆல்ஃபா, பீட்டா, காமா

ஆல்ஃபா, பீட்டா, காமா

உருமாறும் கொரோனாவைக் கண்டுபிடிக்கும் நாட்டின் பெயரை சூட்ட எதிர்ப்பு எழுந்தால் உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய வைரஸ் ஒன்றையும் கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்தவும் முடியும் அதைக் குறிப்பிட்டுப் பேசவும் முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பூஞ்சை வகைகள்

பூஞ்சை வகைகள்

கொரோனா பல வகைகளாக உருமாற்றம் அடைந்து மக்களைத் தாக்கி வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பினாலும் கருப்பு, வெள்ளை, மஞ்சள் என பூஞ்சை வகைகளும் மக்கள் பாதித்து உயிரைக் குடித்து வருகிறது. இந்த நோய் பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்று மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

English summary
The WHO has introduced a new naming convention for the coronavirus variants of concern. The new convention uses letters from the Greek alphabet to identify the various variants, which up to this point have been identified with a clunky string of letters and numbers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X