மோடிக்கு எதிராக கெஜ்ரிவால் போட்டியா?.. அப்போ ஈசியா ஜெயிப்போம்ல நாங்க.. ஆம் ஆத்மியை கேலி செய்த பாஜக!
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு போட்டியாக அரவிந்த் கெஜ்ரிவால் நிறுத்தப்படுவார் என்று கூறிய ஆம் ஆத்மி கட்சிக்கு பதிலளித்த பாஜக, ''அவரது பெயரை கூட பலருக்கு தெரியாது, இதனால் நாங்க ஈசியா வெற்றி பெறுவோம்'' என்று பதிலளித்துள்ளது.
Recommended Video
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்து வருகிறார். துணை முதல்வராக மணீஷ் சிசோடியா இருந்து வருகிறார்.
இவருக்கு கூடுதலாக கல்வித்துறையும், ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியோடு இவ்விரு துறைகளையும் கவனித்து வந்தார்.

31 இடங்களில் சிபிஐ சோதனை
இந்த நிலையில், மணீஷ் சிசோடியா கவனித்து வந்த ஆயத்தீர்வை துறையின் கீழ் கொண்டு வந்த மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் நேற்று மணீஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியில் உள்ள மணீஷ் சிசோடியாவின் வீட்டைத் தவிர, 7 மாநிலங்களில் உள்ள 31 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து
குறிப்பாக மதுபானக் கொள்கை விதி மீறல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மதுபான விதிகளில் திருத்தம் செய்தது மற்றும் உரிம கட்டணத்தை குறைத்தது போன்றவற்றின் மூலம் இந்த முறைகேடு நடந்துள்ளது. மேலும் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில் மணீஷ் சிசோடியா தான் முதலிடத்தில் இருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''அமெரிக்காவில், மிகப்பெரிய பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்' தனது முதல் பக்கத்தில் இன்று மணீஷ் சிசோடியா புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

பயப்படவில்லை
அவரை ‘உலகின் சிறந்த கல்வி மந்திரி' என்று புகழாரம் சூட்டி உள்ளது. இது மத்திய ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தான் அதே நாளில் இங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். எனினும் இந்த சோதனைக்காக நாங்கள் பயப்படவில்லை. ஏனென்றால் இதற்கு முன்பும் அவர்கள் மணீஷ் சிசோடியா உள்பட பல்வேறு அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இப்போது நடத்தப்படும் சோதனையிலும் எதுவும் வெளிவராது.

மத்திய அரசுக்கு கோபம்
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து இன்று காலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மணிஷ் சிசோடியா, "சிபிஐ சில தினங்களில் என்னை கைது செய்யலாம். எனது செல்போனையும், லேப்டாப்பையும் சிபிஐ அதிகாரிகள் எடுத்துச்சென்று விட்டனர். எனக்கு ஏந்த அச்சமும் கிடையாது. வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கெஜ்ரிவாலை தான் போட்டியாக பாஜக பார்க்கிறது. டெல்லியில் உள்ள கல்வி மாதிரியைப் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பாராட்டி செய்தி வெளியிட்டது மத்திய அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

மிகப்பெரிய வெற்றி பெறுவோம்
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவரும் அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, ''ஆம் ஆத்மி பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் களம் இறங்கினால், தங்களுக்கு போட்டி எளிதாக இருக்கும்'' என்று கேலி செய்துள்ளார். இது குறித்து ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், "2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் முகமாக அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிறுத்தப்பட்டால் பாஜகவுக்கு நல்லதுதான். ஏனெனில் கெஜ்ரிவால் பெயரைக் கூட பலரும் கேட்டிருக்க மாட்டார்கள். எனவே, நாங்கள் மிகப்பெரிய வெற்றியை ருசிக்க முடியும்' என்றார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications