”ஹிஜாப்” முக்கியமில்லை.. அது பெண்களை பின்னுக்கு தள்ள நடக்கும் சதி.. கேரளா ஆளுநரின் அடுத்த அதிரடி..!
டெல்லி : இஸ்லாத்தில் அவசியமானது என ஐந்து விஷயங்கள் மட்டுமே உள்ளதாகவும் அவற்றில் ஹிஜாப் இல்லை எனவும் ஹிஜாப் சர்ச்சை முஸ்லிம் பெண்களை பின்னுக்குத் தள்ளும் சதியே தவிர சர்ச்சை இல்லை என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள சில உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்துத்துவா மாணவர்கள் ஹிஜாப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தனர்.
கல்வீச்சு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வன்முறை நடந்ததால் கர்நாடகாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹிஜாப் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முஸ்லீம் சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

ஹிஜாப் விவகாரம்
ஹிஜாப் விவகாரம் சர்வதேச பிரச்சினையாக மாறும் வாய்ப்பு இருந்த நிலையில், வெளிநாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் பிரச்சனை ஓயாத நிலையில் பல்வேறு தரப்பினரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கேரள ஆளுநர் கருத்து
சில கருத்துக்கள் ஹிஜாப்புக்கு ஆதரவாகவும் சில கருத்துக்கள் சர்ச்சையை மேலும் வலுவாக்கும் வகையிலும் இருந்து வருவது பரபரப்பை மேலும் கூட்டி வருகிறது. இந்த நிலையில் இஸ்லாத்தின் அவசியமான ஐந்து விஷயங்கள் மட்டுமே உள்ளன எனவும் அவற்றில் ஹிஜாப் இல்லை என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அவசியம் இல்லை
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆரிப் முகமது கான் சமீபத்தில் கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பேசிய அவர்," இஸ்லாத்தில் அவசியமான 5 விஷயங்கள் மட்டுமே, அவற்றில் ஹிஜாப் இல்லை எனவும், அரசியலமைப்பின் 25 வது பிரிவின் பாதுகாப்பைக் கோரும் எந்தவொரு அம்சமும் "நம்பிக்கை நடைமுறைக்கு இன்றியமையாததாகவும், உள்ளார்ந்ததாகவும் மற்றும் ஒருங்கிணைந்ததாகவும்" இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது என்றார்.

பெண்களுக்கெதிரான சதி
ஹிஜாப் தொடர்பாக நடந்து வரும் சர்ச்சை, முஸ்லிம் பெண்களை பின்னுக்கு தள்ளும் சதியே தவிர சர்ச்சை அல்ல என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். "மதத்திற்கும் கல்விக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை," என்றும், இஸ்லாத்தில், "மதத்தின் நோக்கம் மனிதர்களை அறிவைப் பெறச் செய்வது" என்றும், முத்தலாக் தடைக்குப் பிறகு - மூன்று முறை தலாக் சொல்லி உடனடியாக விவாகரத்து செய்யும் நடைமுறை - முஸ்லீம் பெண்கள், விடுதலையை உணர்கிறார்கள். "அவர்கள் சுதந்திர உணர்வுடன் இருக்கிறார்கள். அவர்கள் கல்வியைத் தொடர்கிறார்கள். அவர்கள் பெரிய தொழிலில் சேருகிறார்கள், ஹிஜாப் சர்ச்சை ஒரு சதி" என்று அவர் மேலும் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications