டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு.. உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: விதிகளை மீறி கடற்கரையில் கட்டப்பட்ட மரடு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணியினை 135 நாளில் முடிக்க வேண்டும் என்றும், அங்குள்ள ஒவ்வொரு குடியிருப்புவாசிகளுக்கு தலா ரூ.25லட்சம் ரூபாயை கேரள அரசு இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மரடு பகுதியில் கடல்சார் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்‍குமாடி குடியிருப்பை இடிக்‍கக்‍கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதிக்‍குள் கட்டிடத்தை இடித்து அதன் அறிக்‍கையுடன் கேரள மாநில தலைமைச்செயலாளர் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

3 மாதம் அவகாசம் கேட்பு

3 மாதம் அவகாசம் கேட்பு

அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், கட்டிடத்தை இடிக்‍க மூன்று மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நீதிபதி ரவீந்ரா எஸ். பட் ஆகியோர் அமர்வு " கட்டிடத்தை இடிக்‍க கால அவகாசம் கோருவது அதிர்ச்சி அளிக்கிறது.

இடித்து தள்ள வேண்டும்

இடித்து தள்ள வேண்டும்

இயற்கை பேரிடர்களால் மக்‍களுக்‍கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பதிலளிப்பது. குடியிருப்புகளை இடிக்கப்பட வேண்டும். உங்களால் (கேரளா அரசாங்கத்தால்) அதை இடிக்க முடியாவிட்டால், அதை உங்கள் பதில் (கேரள அரசு) பணத்தில் வேறு ஒருவரை வைத்து இடிக்குமாறு கேட்போம் என்று அதிரடியாக தெரிவித்தது.

ஆய்வு செய்யணும்

ஆய்வு செய்யணும்

மேலும் கேரள மாநிலத்தில் இதேபோன்று எத்தனை அடுக்‍குமாடி கட்டிடங்கள் கடல்சார் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

138 நாளில் முடிச்சிடுங்க

138 நாளில் முடிச்சிடுங்க

மரடு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக உடனடியாக தலா 25லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இடைக்கால இழப்பீடு செலுத்துவதற்கான பணத்தை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் பின்னர் சட்டவிரோத குடியிருப்புகள் கட்டியவர்களிடம் அதை மீட்டு, 138 நாளில் இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் குழு

நீதிபதிகள் குழு

மேலும் அடுக்குமாடி இடிப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற குழுவுக்கான பரிந்துரையை வழங்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருந்து நீதிபதி குழு தேர்வு செய்யப்படும் என்றும், அந்த குழு ஒவ்வொரு குடியிருப்புகளையும் மதிப்பீடு செய்யும் என்றும் இழப்பீட்டை முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கேரள அரசுக்கு சிக்கல்

கேரள அரசுக்கு சிக்கல்

முன்னதாக கட்டிடத்தை இடிக்‍க எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள 350 குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரள எதிர்கட்சியினரும் இணைந்து போராட்டம் நடத்தி வருவதால் கட்டிடத்தை இடிப்பதில் கேரள அரசுக்‍கு சிக்‍கல் நிலவுகிறது.

English summary
kerala Maradu flat demolition to be completed in 138 days and payment of ₹25 lakh each as interim compensation: SC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X