டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'கூ' ஆப்.. அப்படின்னா அர்த்தம் என்னா.. அதை எப்படி எங்க வாயால சொல்றது.. தவிக்கும் தமிழர்கள்!!

Google Oneindia Tamil News

டெல்லி: ட்விட்டருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'கூ' ஆப் தமிழ் அர்த்தம் என்னவென்று இணையவாசிகள் அதிகம் தேடி வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவதூறு பேச்சுக்கள், வெறுப்புகள் ட்விட்டரில் அதிகரித்து வருவதாகவும், அதனை உடனே நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும் என மத்திய அரசு ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து சில கணக்குகளை முடக்கிய ட்விட்டர், சம்பந்தப்பட்ட நபர்கள் அவர்கள் சார்பில் அளித்த விளக்கத்தை ஏற்று, மீண்டும் அந்த கணக்குகள் இயங்க அனுமதித்தது. இதனால் மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிர்வாகத்துக்கும் மோதல் வெடிக்கத் தொடங்கியது. சில ட்விட்டர் உயர் அதிகாரிகள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 'கூ' ஆப்-ல் பிரபலங்கள்

'கூ' ஆப்-ல் பிரபலங்கள்

இந்நிலையில், ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள 'கூ' 'koo' ஆப் பிரபலமாகி வருகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கிரிக்கெட்டர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பல பிரபலங்கள் 'கூ' சமூகவலைதளத்தில் இணைந்துள்ளனர். இதேபோல் அரசாங்கத் துறைகளும் ட்விட்டருக்கு மாற்றாக 'கூ' சமூகவலைதளத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

 தமிழர்கள் அதிர்ச்சி

தமிழர்கள் அதிர்ச்சி

இந்த மைக்ரோ பிளாக்கிங் தளம், தொழில்முனைவோர்களான அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயாங்க் பித்வட்கா ஆகியோரால் இணைந்து பெங்களூரில் நிறுவப்பட்டது. இந்நிலையில், இந்த 'கூ' ஆப் தமிழர்கள் மத்தியில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

 அதிகரிக்கும் 'கூ' ட்வீட்ஸ்

அதிகரிக்கும் 'கூ' ட்வீட்ஸ்

அந்த ஆப்-ல் உள்ள வசதிகளுக்காக வைரல் ஆகவில்லை. 'கூ' எனும் அதன் பெயரால் தமிழர்கள் மத்தியில் இந்த ஆப் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக தளங்களில் பலரும் கேலியாக 'கூ' என்பதை பதிவிட்டு ட்வீட் செய்து வருகின்றனர்.

 தமிழர்கள் கிண்டல்

தமிழர்கள் கிண்டல்

தமிழர்கள் கிண்டல் செய்வது புரியாமல் குழம்பும் தமிழ் மொழி தெரியாதோர், 'கூ' என்பதற்கு தமிழில் அர்த்தம் என்ன என்று அப்பாவியாக சமூக தளங்களில் கேட்க, அதற்கும் வெளிப்படையாக பதில் சொல்ல முடியாத தமிழ் நெட்டிசன்கள், சிரிப்பு எமோஜிக்களை மட்டும் பதிவிட்டு வருகின்றனர்.

 அதிகரிக்கும் Search Volume

அதிகரிக்கும் Search Volume

அதுமட்டுமின்றி, 'கூ' என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று கூகுளில் பலரும் முண்டியடித்து தேடுவதால் கூகுளில் அந்த வார்த்தையின் Search Volume தாறுமாறாக எகிறியுள்ளது.

English summary
Koo App tamil meaning netizens search - கூ ஆப் என்றால் என்ன?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X