அதிரடி விலை குறைப்பு.. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.36 சரிந்தது.. சென்னையில் எவ்வளவு தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.36 வரை குறைந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.36 குறைந்து ரூ.2,009க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் வணிக பயன்பாடு மற்றும், வீட்டு உபயோகத்துக்கு என்று 2 வகை சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் 14.2 கிலோ எடை கொண்டது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் எடை என்பது 19 கிலோவாக உள்ளது. இதில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

சிலிண்டர் விலை நிர்ணயம்
மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசலை போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வருகிறது.

ரூ.36 விலை குறைப்பு
இந்நிலையில் தான் இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டருக்கான விலை ரூ.36 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வணிக சிலிண்டர் ஒன்று ரூ.2,009க்கு விற்பனையாக உள்ளது. இதற்கு முன்பு ஆகஸ்ட்டில் ரூ.2,045க்கு விற்பனையான நிலையில் தற்போது கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது சென்னனையின் நிலவரம் ஆகும்.

சற்று ஆறுதல்
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை என்பது உச்சம் தொட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இறக்கம் கண்டுள்ளது. இது ஓட்டல் உள்பட சிறு வியாபாரிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

வீட்டு சிலிண்டர் விலை மாற்றமில்லை
இந்த விலை குறைப்பு மூலம் டெல்லியில் இன்று முதல் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1,885க்கு பதில் ரூ.1,859க்கும் விற்பனையாக உள்ளது. இருப்பினும் இன்றைய விலை குறைப்பு என்பது வீட்டு உபயோக சிலிண்டருக்கு பொருந்தாது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications