"நீட் விலக்கு விவகாரம்" மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார். குறிப்பாக தமிழக ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தரச்செய்து ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தில் இருந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். குறிப்பாக நீட் விலக்கு மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளது.

மா.சுப்பிரமணியன் கோரிக்கை
இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வைத்த கோரிக்கை குறித்து விளக்கமளித்தார். அதில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவர் அலுவலகம் மூலம் உள்துறை, சுகாதாரம், ஆயுஷ் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளில் இருந்து பல்வேறு விளக்கங்கள் கேட்டு கடிதம் அனுப்பட்டது.

நீட் விலக்கு மசோதா
அதற்கான விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதனை பொறுமையாக கேட்டுக்கொண்ட மத்திய அமைச்சர், முடிந்ததை பரிசீலிக்கிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும், 3 ஆண்டுகளாக பணிகள் நடக்காமல் உள்ளது குறித்து கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர், ரூ.1,400 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம், தற்போது ரூ.1,900 கோடியாக உயர்ந்திருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை
அதற்கான வரைபடம் தயாரிக்க குழு அமைக்க உள்ளோம். அடுத்த வாரத்தில் அதற்கான ஒப்பந்த புள்ளிகள் முடிவாகிவிடும். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கிவிடலாம் என்று ஆறுதலான செய்தியை தெரிவித்தார். பின்னர் கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு, மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கிய பின், கோவையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம் என்று தெரிவித்தார்.

6 மாவட்டங்கள்
தொடர்ந்து தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நிலை இருக்கிறது. தென்காசி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு, இதுகுறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானித்து நல்ல முடிவு கூறுகிறோம் என்று தெரிவித்தார்.

உக்ரைன் மாணவர்கள்
மேலும், உக்ரைனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும். அகில இந்திய ஒதுக்கீடு செய்து, நிரப்பப்படாமல் உள்ள மருத்துவ இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லுரி நிறுவ வேண்டும் எனவும், கொரோனா தடுப்பூசி கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications