டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வராக ஆசையா? நீங்க சின்ன பையன் பாஸ்.. ஆதித்யா தாக்கரேவை கலாய்க்கும் பாஜக அமைச்சர்!

சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே சின்ன பையன், அதனால் அவர் முதல்வர் ஆக முயற்சிக்க கூடாது என்று பாஜக அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே சின்ன பையன், அதனால் அவர் முதல்வர் ஆக முயற்சிக்க கூடாது என்று பாஜக அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

என்னதான் மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இடங்களில் பாஜக சிவசேனா கூட்டணி வெற்றிபெற்று இருந்தாலும் இன்னும் அவர்களால் கூட்டணி அமைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவசேனா தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று உறுதியாக உள்ளது.

சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

திருவள்ளுவருக்கு காவி வண்ண உடை.. சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக.. கடும் கொந்தளிப்பு!திருவள்ளுவருக்கு காவி வண்ண உடை.. சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக.. கடும் கொந்தளிப்பு!

என்ன பேட்டி

என்ன பேட்டி

மத்திய பாஜக அமைச்சர் ராமதாஸ் அத்வாலே இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்துதான் சிவசேனா வெற்றிபெற்றது. அவர்கள் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணியில் சேர முடிவு எடுத்தால் அது தவறான முடிவாகும். மக்கள் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உடனே வேண்டும்

உடனே வேண்டும்

இதனால் உடனடியாக பாஜகவுடன் இணைந்து சிவசேனா ஆட்சியை அமைக்க வேண்டும். 15 வருடங்கள் மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போதெல்லாம் அதிக இடங்களை வென்ற கட்சிதான் இங்கு ஆட்சி அமைத்தது. நாங்கள்தான் இங்கு இப்போது அதிக இடங்களை வென்று இருக்கிறோம்.

ஹரியானா எப்படி

ஹரியானா எப்படி

அதேபோல் ஹரியானாவில் நாங்கள் அதிக இடங்களை வென்றோம். அதனால் பாஜகவிற்கு முதல்வர் பதவி கிடைத்து. ஜேஜேபி கட்சிக்கு அதனால்தான் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. 2.5 வருடத்திற்கு ஒரு முதல்வர் என்ற திட்டம் வேலைக்கு ஆகாது. அது தோல்வி அடைந்த திட்டம்.

அனுபவம் இல்லை

அனுபவம் இல்லை

என்னை கேட்டால் ஆதித்யா தாக்கரே இப்போது முதல்வராக விரும்ப கூடாது. அவருக்கு போதுமான அனுபவம் கிடையாது. எதிர்காலத்தில் உத்தவ் தாக்கரே வேண்டுமானால் முதலைவராக முயற்சிக்கலாம். ஆதித்யா முதல்வரானால், ஆட்சி என்ன ஆகுமோ? என்று கேள்வி எழுப்பினார்.

English summary
Maharashtra: Aaditya doesnt have the experience to run a state says BJP Union Minister Ramdas Athawale.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X