மணிப்பூர் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்: பிப்.28-ல் முதல் கட்ட வாக்குப் பதிவு
டெல்லி: மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 28-ந் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மணிப்பூர் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அட்டவணையை ஜனவரி 8, 2022 தேதியிட்ட செய்திக்குறிப்பில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல் கட்ட தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 1, 2022 அன்றும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 4, 2022 அன்றும் வெளியிடப்பட்டது. முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 27, 2022 அன்றும் இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3, 2022 அன்றும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் மணிப்பூருக்கு சென்ற ஆணையம், அரசியல் கட்சிகள், தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் மாநில அளவிலான பிற அதிகாரிகள், தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், அசாம் ரைபிள்ஸ் தலைமை இயக்குநர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடியது. பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து இந்த பயணத்தின் போது ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டன.
தற்போதைய கள நிலவரம், கடந்த கால நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து தரவுகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 153-ன் கீழ், மணிப்பூர் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதிகளை மாற்றியமைக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 28, 2022 (திங்கட்கிழமை) அன்றும் இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 5, 2022 (சனிக்கிழமை) அன்றும் நடைபெறும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications