மணிப்பூர்: ஒரு சம்பவம் தானா? எத்தனை கேஸ் போட்டீங்க? எத்தனை பேரு அரெஸ்ட்?உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: மணிப்பூரில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது ஒரு சம்பவம் மட்டுமல்ல.. இதுபோல எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? பலாத்கார சம்பவத்தில் வழக்கு பதிவு செய்ய ஏன் 14 நாட்கள் தாமதம் என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகள் எழுப்பி இருக்கிறது.
மணிப்பூரில் குக்கி இனப் பெண்கள், மைத்தேயி இனக் கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். மேலும் பலாத்காரம் செய்யப்பட்ட 3 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு 100க்கும் மேற்பட்டோரால் ஊர்வலமாக தெருவில் அழைத்துச் செல்லப்பட்ட பயங்கரத்தின் வீடியோ வெளியாகி தேசத்தை மூர்ச்சையாக்கிப் போட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வீடியோக்கள் வெளியான பின்னர் மணிப்பூர் மாநில அரசு வழக்குகள் பதிவு செய்து பலரையும் கைது செய்தது. இந்த நிலையில் மணிப்பூர் பலாத்கார சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்களும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு:
மணிப்பூர் சம்பவம் ஒரு நிர்பயா சம்பவம் போல அல்ல. இது கூட்டு பலாத்காரம். இந்த சம்பவம் நிகழ்ந்து 14 நாட்களுக்கு பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய 18 நாட்கள் தாமதம் ஏன்? மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார்தான் அழைத்து சென்று அந்த கும்பலிடம் விட்டிருக்கின்றனர்.
மணிப்பூரில் வீடியோ வெளியானது ஒரு சம்பவம் மட்டுமல்ல. மணிப்பூர் மாநிலத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளன? மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை உருவாக வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் இன்னமும் அமைதி திரும்பாமல் இருப்பது அதிர்ச்சியை தருகிறது.
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நீதியை வழங்குவோம். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தராமல் இருக்கின்றனர். அவை தொடர்பாகவும் நாம் விசாரித்தாக வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications