மேகதாது அணை விவகாரத்தில் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது-- உச்ச நீதிமன்றம்
டெல்லி: மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தற்போது விசாரிக்கப்படாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, இந்த விவகாரத்தில் வர்நாடக அரசு தரப்பில் தேசஇய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்காய முதன்மை அமர்வில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடியுமா ? என்பதே கேள்வி.
ஏனெனில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு மேகதாது ஆணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவைப் பிறப்பித்தது, ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது விசாரணை அதிகார வரம்பை மீறி கர்நாடகத்தின் மறுஆய்வஅறியாமல் விசாரித்து தமிழக அரசின் கருத்தை அறியாமல் உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே தமிழகத்தில் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நதி நீர் சார்ந்த எல்லா பிரச்சினைகளையும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலமாக தான் தீர்வு காண வேண்டும் என்றால் அது பிரச்சனைகளை அதிகப்படுத்தும், தமிழக அரசு தற்போது அத்தகைய சண்டையை தான் போடுகிறது என குற்றச்சாட்டினார்.
இதனைதொடர்ந்து நீதிபதிகள் கூறும் போது, மேகதாது அணை விவகாரத்தில் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, ஏனெனில் பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கலாமா என்பது தொடர்பான மனு மீது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னர் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.


Click it and Unblock the Notifications
