டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலியல் குற்றம் சுமத்திய பெண் மீது பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர் வழக்கு.. MeToo பரபரப்பு!

மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

எம்.ஜே அக்பர் மீது 10 பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் புகார் அளித்து இருக்கிறார்கள். இது பாஜக கட்சிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது.

MeToo Allegations: BJP MP MJ Akbar files Defamation case against Journalist Priyaramani

இந்தியாவில் தற்போது ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகியுள்ளது. அதன் மூலம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் பாஜக எம்பியும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து 10 பெண்கள் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர்.

இதனால் பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று அவர் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.ஜே அக்பர் பதவி விலகவில்லை.

இந்த நிலையில் இன்று எம்.ஜே அக்பர் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். பிரியா ரமணிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்து இருக்கிறார்.

[ என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானது, பதவி விலக மாட்டேன்: மத்திய அமைச்சர் அக்பர் ]

வேண்டும் என்றே அவமானப்படுத்துவதற்காக பொய்யான புகார்களை அளிக்கிறார்கள் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார். குற்றச்சாட்டு வைத்த மேலும் சிலருக்கு எதிராகவும் இப்படி வழக்கு தொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
MeToo Allegations: BJP MP MJ Akbar files Defamation case against Journalist Priyaramani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X