"ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம்".. புதிய அமைச்சகத்தை உருவாக்கிய பிரதமர் மோடி.. முதல் பதவி யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார். இதற்கான அமைச்சர் இன்று மாலை நியமிக்கப்பட உள்ளார்.

மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. புதிய மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும்.

Ministry of Cooperation: PM Modi creates a new ministry ahead of cabinet expansion

பல மத்திய அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகவும் இளமையான மத்திய அமைச்சரவை இன்று உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பெண் எம்பிக்களுக்கு அமைச்சரவையில் அதிக இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில்தான் ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாடு முழுக்க கூட்டுறவு துறையை கவனிப்பதற்காக, கூட்டுறவு துறையை பலப்படுத்த, புதிய திட்டங்களை கொண்டு வர, கூட்டுறவு துறைக்கான விதிமுறைகளை உருவாக்க, நாடு முழுக்க ஒரே மாதிரியான கூட்டுறவு கொள்கையை உருவாக்க இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு கட்டமாக கூட்டுறவு ஒன்றிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கூட்டுறவு அமைச்சரவை மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. பல மாநில அரசுகளின் நிர்வாகத்தில் கூட்டுறவு அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில் கூட்டுறவு துறைக்கான ஒன்றிய அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்த அமைச்சகத்தின் அமைச்சராக முதல் முதலாக பொறுப்பேற்க போகும் எம்பி யார் என்று கேள்வி எழுந்துள்ளது. சிறப்பாக, தனியாக ஒரு அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதல் பொறுப்பு யாரிடம் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகும். இளம் எம்பி ஒருவருக்கு இந்த புதிய அமைச்சரவை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+