டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியை பார்த்ததும் ஒரே சிரிப்பு.. 95 வயதிலும் அத்வானி அப்படியே இருக்காரே! நேரில் பிறந்தநாள் வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானியின் 95 வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது இல்லத்து பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி அசைக்க முடியாத வலிமையை பெற்று உள்ளது என்றால் அதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் எல்.கே.அத்வானி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் அத்வானி.

பாஜகவின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து வந்தவர். இவரது ரத யாத்திரைகளால் நாட்டின் பல பகுதிகளில் மதக்கலவரம் தோன்றி ரத்த ஆறுகள் ஓட தாமரை மலர்ந்து கொண்டிருந்தது.

 இனி பாஜகவோடு “ஒட்டும் இல்ல! உறவும் இல்ல!” அத்வானி நாட்டுக்கு உழைத்தார்..இன்றோ? நிதீஷ் குமார் சுளீர் இனி பாஜகவோடு “ஒட்டும் இல்ல! உறவும் இல்ல!” அத்வானி நாட்டுக்கு உழைத்தார்..இன்றோ? நிதீஷ் குமார் சுளீர்

 அத்வானி

அத்வானி

இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், பாஜகவின் தலைமை நிர்வாகியாகவும் 2014 ஆம் ஆண்டு வரை செயல்பட்ட அத்வானியின் முக்கியத்துவம், மோடி - அமித்ஷா வருகைக்கு பின் குறையத் தொடங்கியது. மறுபக்கம் வயது முதிர்வு காரணமாக கட்சி, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதை படிப்படியாக குறைத்துக் கொண்ட அத்வானி தொலைகாட்சிகளிலும் தோன்றுவதில்லை.

95 வது பிறந்தநாள்

95 வது பிறந்தநாள்

ஆனால், தனது ஒவ்வொரு பிறந்தநாள், சுதந்திர தினம், குடியரசு தினங்களின்போது அத்வானி தொலைக்காட்சிகளில் தோன்றுவது வழக்கம். குறிப்பாக பிரதமர் மோடி அவரது பிறந்தநாளன்று நேரில் சென்று வாழ்த்துவது வழக்கம். அந்த வகையில் இன்று தனது 95 வது பிறந்தநாளை அத்வானி கொண்டாடி வாருகிறார்.

பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

இந்த நிலையில் டெல்லியில் உள்ள அத்வானி வீட்டுக்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உடன் இருந்தார். மோடியை பார்த்ததுடம் அத்வானி அதே உற்சாகத்துடன் சிரித்து பேசி மகிழ்ந்தார்.

அத்வானி அரசியல்

அத்வானி அரசியல்

அத்வானி பொதுச் செயலாளராக இருந்த ஜன சங்கம் கட்சி கலைக்கப்பட்ட பின்னர் 1980 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சியை தொடங்கினார். தற்போது பாஜகவில் மோடி - அமித்ஷா இணை அசைக்க முடியாத நிலையில் உள்ளதைபோல் அப்போது அக்கட்சியில் அசைக்க முடியாத இருபெரும் தலைவர்களாக வாஜ்பாயும் அத்வானியும் இருந்தனர்.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

நாட்டில் அவசர நிலையை இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய பிறகு காங்கிரஸ் மீது ஏற்பட்ட அதிருப்தியால், மொரார்ஜி தேசாய் தேர்தலில் வென்று பிரதமராக பதவியேற்க அவரது அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பதவியேற்று முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தார் அத்வானி.

துணை பிரதமர்

துணை பிரதமர்

1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக அத்வானி பதவி வகித்தார். 2002 முதல் 2004 வரை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் துணை பிரதமராக இருந்தவர் அத்வானி. அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த அத்வானி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi visited senior BJP leader and former Deputy Prime Minister of India LK Advani on his 95th birthday at his residence in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X