பொருளாதாரமும் போச்சு.. சீனா அட்டகாசம் வேறு.. மோடிக்கு மீட்க வழி தெரியுமா? சு.சாமி காட்டம்
தேசிய பாதுகாப்பு மிகவும் பலவீனமடைந்துள்ளது. மோடிக்கு சீனாவை பற்றி புரியாமல் உள்ளது என்று சுப்ரமணியன் கூறியுள்ளார்.
டெல்லி: 8 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை மோடி அடையத் தவறி விட்டதாக சுப்ரமணியசுவாமி குற்றம் சாட்டியுள்ளார். 2016ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு மிகவும் பலவீனமடைந்துள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளார் சுப்ரமணியன் சுவாமி.
Recommended Video
மத்தியில் ஆளும் பாஜக அரசை மிக கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வருபவர் சுப்பிரமணியன் சுவாமி.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசை விமர்சிப்பது எதிர்கட்சியினருக்கு கொண்டாட்டமாகவே இருக்கும். ஆளுங்கட்சியினருக்கு அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என்று குறிப்பிட்டு கடந்த ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் தோல்வி அடைந்துவிட்டது என்று தெரிவித்தார்.

மோடி அரசு தோல்வி
எல்லை பாதுகாப்பிலும் சீனாவின் அத்துமீறலை தட்டி கேட்க முடியாத அளவுக்கு தோல்வியையே சந்தித்துள்ளது. அது போல் தேச பாதுகாப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டனர் என தெரிவித்திருந்தார்.

தொடர் தோல்விகள்
உள்நாட்டு பாதுகாப்பாவது சரியாக இருக்கும் என்றால் அதிலும் காஷ்மீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. வெளிநாட்டுக் கொள்கையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும் தோல்வி அடைந்துவிட்டது மோடி அரசு . இத்தனை தோல்விகளை சந்தித்த நிலையில் நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

மோடி அரசு பலவீனம்
இந்த நிலையில் இன்றைய தினம் 8 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை மோடி அடையத் தவறி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மாறாக, 2016ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு மிகவும் பலவீனமடைந்துள்ளது. மோடிக்கு சீனாவை பற்றி புரியாமல் உள்ளது. மீண்டு வர வாய்ப்பு உள்ளது ஆனால் எப்படி என்று அவருக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்களை எனக்கு பிடிக்கும் சார்
சுப்ரமணிய சுவாமியின் கருத்துக்கு பலரும் பதில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒருவரோ, பாஜகவில் மட்டும் உண்மை பேசுபவர் நீங்கள், அதனால் தான் எனக்கு உங்களை பிடிக்கும் சார்!! ஒருவர் தோல்விகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதனால் அவர் பெரிய சாதனையை அடைய முடியும். தோல்விகளை மறைத்து அதை ஆதரிப்பது அவனுக்கே இழப்பை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications