டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை.. தமிழகம், கேரளாவுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஐஎம்டி கணிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்த ஆண்டு நாட்டில் ஒட்டுமொத்தமாக இயல்பான அளவிலேயே தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இயல்பை விட குறைவாகவும் , ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 'அதிக மழைப்பொழிவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Recommended Video

    பெங்களூருவில் இடியுடன் கனமழை- காலை முதல் வெளுத்து வாங்குகிறது - வீடியோ

    அதாவது கடந்த முறையைப் போலவே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் அதிகமான மழை அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வரலாறு காணாத அளவுக்கு இருந்தது. கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளாவில் சில பகுதிகள், குஜராத் பீகார் உள்பட பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தால் தத்தளித்தன.

    பெங்களூருவில் இடியுடன் கனமழை- காலை முதல் வெளுத்து வாங்குகிறது பெங்களூருவில் இடியுடன் கனமழை- காலை முதல் வெளுத்து வாங்குகிறது

    ஒடிசா மேற்கு வங்காளம் குறைவு

    ஒடிசா மேற்கு வங்காளம் குறைவு

    இந்நிலையில் 2020ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை எப்படி இருக்கும் என்பது குறித்து அகில இந்திய வானிலை ஆய்வு மையம் இப்பேதே கணித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி கடலோர மாவட்டங்களான ஒடிசா, மேற்கு வங்காளம், மிசாரம் உள்ளிட்ட மாவட்ட மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவான மழை பெய்யும். ஆனால் தென் தமிழகம் மற்றும் கேரளாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும்

    சராசரி அளவு இருக்கும்

    சராசரி அளவு இருக்கும்

    பருவமழை ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் என்பத குறித்த வரைபடத்தை பார்க்கும் போது, நாட்டின் பெரும்பகுதிகளில் 40-50% அளவில் சாதாரண மழை அளவாக காட்டுகிறது. குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதி மற்றும் மகாராஷ்டிராவின் வடமேற்கு பகுதி ஆகியவற்றில் 50-60% அளவுக்கு மழை இருக்கும் என்று காட்டுகிறது. ஏப்ரல் 15ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த தகவல் படி, 5 சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ (96-104%) இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இருக்கும்.

    ஆகஸ்ட்டில் அதிகம்

    ஆகஸ்ட்டில் அதிகம்

    தென்மேற்கு பருவழை நாட்டில் ஒட்டுமொத்தமாக இயல்பான அளவிலேயே தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இயல்பை விட குறைவாகவும் , ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 'அதிக மழைப்பொழிவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
    அதாவது கடந்த முறையைப் போலவே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் அதிகமான மழை அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    ஒரே மாதிரி கணிப்பு

    ஒரே மாதிரி கணிப்பு

    இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் மழையின் பரவலைப் பற்றி தெரிவிக்கவில்லை., ஏனெனில் இந்த குறிப்பிட்ட அம்சம் மே அல்லது ஜூன் முதல் வாரத்தில் மட்டுமே கணிக்கப்படுவது வழக்கம். தற்போதைய நிலையில், இந்திய நாட்டில் பெரும்பகுதிக்கு சாதாரண மழைப்பொழிவே இருக்கும் என்று கணித்தது. கிட்டத்தட்ட அதேபோன்று தான்இந்திய வானிலை ஆய்வு மையமும் கணித்துள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மற்றும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் மழைக்காலங்களில் மழை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    ‘Monsoon to be normal', but June-July may see less rains’. southern part of Tamil Nadu and Kerala are expected to receive ‘above normal rainfall’
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X