டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முப்படைகள் மட்டும் போதாது.. 4ஆவதாக ஒரு படை தேவை.. ஆயத்தமாகுமா உலக நாடுகள்?

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளில் உள்ள எதிரிகளை எதிர்கொள்ள முப்படைகள் உள்ள நிலையில் கண்ணுக்கு தெரியாத பயோ வார்களை சமாளிக்க 4ஆவதாக ஒரு படை புதிதாக உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    Coronavirus Is Not Man Made - US Intelligence

    உலகில் உள்ள 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. தொற்றுநோயான இந்த நோய் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதோடு மக்களும் ஒரு வேளை உணவுக்கே அவதியுறும் நிலை உள்ளது.

    இந்த நோய் பயோ வார், பயோ வெப்பனாக இருக்கலாம் என்பது ஆரம்பத்திலிருந்தே எழுந்த சந்தேகமாகும். இதற்கு தீனிபோடும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    ரெண்டே வாரங்கள்தான்.. 122 பேருக்கு பாதிப்பு.. கொரோனா பரப்பும் மையமான டெல்லி சிஆர்பிஎஃப் பட்டாலியன் ரெண்டே வாரங்கள்தான்.. 122 பேருக்கு பாதிப்பு.. கொரோனா பரப்பும் மையமான டெல்லி சிஆர்பிஎஃப் பட்டாலியன்

    சீனாவின் வுகான் பரிசோதனை கூடம்

    சீனாவின் வுகான் பரிசோதனை கூடம்

    கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து வேண்டுமென்றே பரப்பிவிடப்பட்டது என்பது டிரம்பின் வாதமாக உள்ளது. இது போல் அவ்வப்போது ஏதாவது ஒரு நோய்கள் வந்து பல உயிர்களை அள்ளிக் கொண்டு செல்கிறது. ஸ்பேனிஷ் ப்ளூ, சார்ஸ், எபோலா, ஜிகா வைரஸ் என்ற வரிசையில் கொரோனாவும் வந்துவிட்டது.

    கால விரயம்

    கால விரயம்

    இதுபோன்ற நோய்களை கட்டுப்படுத்தவும் தடுப்பு மருந்துகளை கண்டறியவும் ஏற்கெனவே இருக்கும் வேறு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் முயற்சித்து வருகிறார்கள். அன்றாட பணிகளையும் கவனித்து கொண்டு இந்த ஆராய்ச்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருவது சிரமத்தையும் கால விரயத்தையும் ஏற்படுத்துகிறது.

    முப்படைகள்

    முப்படைகள்

    பலரது வாதத்திற்கேற்ப கொரோனா வைரஸ் பயோ வாராக இருந்தால் அதை சமாளிக்க 4-ஆவதாக ஒரு படையை உருவாக்க வேண்டிய அவசியத்தில் இந்த உலகம் தள்ளப்பட்டு விட்டதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ராணுவம், கப்பல் படை, விமான படை என முப்படைகள் உள்ளன. இவை எதிரிகளிடம் இருந்து அந்தந்த நாடுகளை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஊடுருவல்

    ஊடுருவல்

    நாட்டின் எல்லை வழியே ஊடுருவும் எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க ராணுவப் படையும், கடல் வழியே எல்லை தாண்டி ஊடுருவும் தீவிரவாதிகள், எதிரிகளை எதிர்கொள்ள கப்பற்படையும், எதிரிகளின் வான் வழி தாக்குதலுக்கு ஈடு கொடுத்து அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்ய விமான படையும் உள்ளன. இவையெல்லாம் கண்ணுக்கு தெரியும் எதிரிகள், ஆயுதங்களை எதிர்த்து போரிடுகின்றன.

    வைரஸ்

    வைரஸ்

    ஆனால் கண்ணுக்குப் புலப்படாத கிருமிகள், நோய் தொற்றுகள் உள்ளிட்ட பயோ வார்களை எதிர்கொள்ள உலக நாடுகளில் 4ஆவதாக ஒரு படையை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 4-ஆவது படையில் முழுக்க முழுக்க மருத்துவர்கள் (தொற்று நோய், பயோ மெடிக்கல் நிபுணர்கள்), விஞ்ஞானிகளை உள்ளிட்டோர் அடங்கியிருக்க வேண்டும். இவர்களின் அன்றாட பணிகள் எதிர்காலத்தில் வரவுள்ள வைரஸ்களை தாக்கி அழிக்கும் வகையிலான கண்டுபிடிப்புகளாக இருக்க வேண்டும்.

    மருந்து கண்டுபிடிப்பது

    மருந்து கண்டுபிடிப்பது

    நாளை வரும் நோய்க்கு இன்றே எப்படி மருந்து கண்டுபிடிப்பது என நீங்கள் கேட்கலாம். ஒவ்வொரு நோயும் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட மண்டலங்களை தாக்குவதாக உள்ளது. உதாரணத்திற்கு சுவாச மண்டலம், ஜீரண உறுப்புகள் மண்டலம் ஆகியன ஆகும். கொரோனா சுவாச மண்டலத்தை தாக்குகிறது. எனவே 4ஆவது படையில் உள்ள விஞ்ஞானிகள் எந்த வகையில் பயோ வார் ஏற்பட்டாலும் அதை சமாளித்து விரட்டி விடும் வகையில் மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்ற பழமொழிக்கேற்ப எந்த மண்டலத்தை தாக்கினாலும் அதை சரி செய்வதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். அது போல் அந்த வைரஸையே உருத்தெரியாமல் செய்யும் அளவுக்கு 4ஆவது படை செயல்பட வேண்டும். பயோ வார் முதலில் ஒரு நாட்டுக்குள் நுழைவதிலிருந்து அது இறப்பது வரை அனைத்து நடவடிக்கையையும் அலசி ஆராய வேண்டும்.

    4ஆவது படை

    4ஆவது படை

    கொரோனா போனாலும் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொள்ளை நோய் வரும் என இந்தியாவில் உள்ள ஜோதிட சிறுவன் தனது ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளார். இதை மனதில் கொண்டு அதற்குள்ளாவது ஒவ்வொரு நாடும் 4ஆவது படையை உருவாக்குவார்களா? முப்படைகள் எதிரிகளை 24 மணி நேரமும் கண்காணித்து செயலாற்றும் வகையில் இந்த 4ஆவது படையும் 24 மணி நேரமும் பயோ வாரை எதிர்ப்பது குறித்தும் அதை எதிர்கொள்வது குறித்தும் ஆய்வுகளை நடத்த வேண்டும்.

    பயனில்லை

    பயனில்லை

    உயிரிழப்பு ஏற்படுகிறது, பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என கவலை தெரிவிப்பதிலும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதிலும் எந்த பயனும் இல்லை. அதற்கு பதிலாக போர் கால அடிப்படையில் பயோ வாரை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் வேண்டும். வந்தபின் அவதிப்படுவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது என்பது இதற்கு சாலச் சிறப்பாக இருக்கும்.

    English summary
    Most of the countries needs 4th force to tackle the bio war as the pandemic destroys the more.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X