சோனியா காந்தி சொன்ன பெயர்! நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் அடிப்பட்ட மோதிலால் வோரா.. யார் இவர்?
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரித்து வரும் நிலையில் அவர் கட்சியின் முன்னாள் பொருளாளரும் மூத்த தலைவருமான மோதிலால் வோரோ மீது கை காட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் 5,000 பேரை பங்குதாரர்களாக இணைந்து கடந்த 1937-ம் ஆண்டு தொடங்கினார். இந்த பத்திரிகையை அசோசியேட்டட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம்(AJL) நடத்தி வந்தது.

பத்திரிக்கை
அப்போது இது எந்த ஒரு தனிநபருக்கும் சொந்தமானதாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையாக செயல்பட்டு வந்தது. இந்த பத்திரிகையின் கடன் சுமை ரூ.90 கோடிக்குமேல் அதிகரித்ததால், கடந்த 2008-ம்ஆண்டு இந்த பத்திரிகை மூடப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு இதன் பங்குதாரர்களின் எண்ணிக்கை 1057-ஆக சுருங்கியது. ஏஜெஎல் நிறுவனத்தின் கடனை அடைத்துமீண்டும் பத்திரிகையை தொடங்க, காங்கிரஸ் கட்சி சார்பில் கடன் அளிக்கப்பட்டது.

கடன்
அதன் பின் ‘யங் இந்தியா' என்ற நிறுவனம், கடந்த 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு 76 சதவீத பங்குகள் உள்ளன. எஞ்சிய 24 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸிடம் உள்ளன. இந்நிலையில் யங் இந்தியா நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.50 லட்சத்தை செலுத்தி, ஏஜெஎல் நிறுவனத்தின் பல கோடி மதிப்பிலான சொத்துகளின் பங்குகளை கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டு மேலெழுந்தது.

யங் இந்தியா’
இது தொடர்பாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் அமலாக்கத்துறை கடந்த 2014-ம் ஆண்டு யங் இந்தியா நிறுவனம் மீது நிதி மோசடி விசாரணையை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தியது. பின்னர் சோனியா காந்தியிடமும் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த விசாரணையில், AJL-ஐ கைப்பற்றப்பட்டதற்கான மேலும் சில விவரங்கள் மோதிலால் வோராவுக்குத் தெரியும் என சோனியா காந்தி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

மோதிலால் யார்?
இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் சோனியா காந்தியிடம் சுமார் 55 கேள்விகள் கேட்கப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தற்போது வழக்கின் கவனம் மோதிலால் வோரோ பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளது.
மோதிலால் வோரோ காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய ஒருவராவார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் கட்சியில் வீரியமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2008ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டபோது காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே இவர் விசாரிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 2020ல் உயிரிழந்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications