அடேங்கப்பா.. 5 மாநில தேர்தலுக்கு பாஜக ரெடி.. தோல்வியிலும் பாடம் கற்கனும்.. மீட்டிங்கில் சொன்ன மோடி
டெல்லி: வெற்றி மற்றும் தோல்வி ஆகிய இரண்டிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களுக்கு பாஜக இப்போதே தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சில அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.

பாஜக நிலைமை
சமீபத்தில் முடிவடைந்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மகிழ்ச்சியையும் கவலையையும் சேர்த்து வழங்கியுள்ளன. அசாம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது பாஜக. புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியோடு பாஜக ஆளும் அரசில் அங்கம் வகிக்கிறது.

மேற்கு வங்கத்தில் தோல்வி
அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேற்கு வங்க தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க பாஜக பெரும்பான்மைக்கு பக்கத்தில் கூட நெருங்க முடியவில்லை. தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரியணை ஏறியது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்ததால் ஒருவகையில் தமிழகத்தில் அவர்கள் தங்கள் கூட்டணி ஆட்சியை இழந்து விட்டனர் என்று கூறலாம்.

5 மாநில சட்டசபை தேர்தல்
கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை என்ற நிலையில் தான் அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, குஜராத் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி இப்போதே பாஜக வெற்றிக்காக வியூகங்களை வகுத்து வருகிறது.

பாடம் கற்க வேண்டும்
இந்த நிலையில்தான் பாஜக நிர்வாகிகளிடம் நரேந்திர மோடி பேசுகையில், வெற்றி பெற்று இருந்தாலும் சரி , தோல்வியடைந்து இருந்தாலும் சரி, அதில் இருந்து என்ன பாடம் கற்க கற்க முடியுமோ அதைக் கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு முன்பே தேர்தல் வெற்றிக்காக பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில், காங்கிரஸ் வழக்கம்போல அமைதியாக உள்ளது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications