டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Budget 2019: புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்.. நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2019 : புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்.. நிர்மலா சீதாராமன்- வீடியோ

    டெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிக்க மத்திய அரசு முற்படும் என்பதால் இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    National Education Policy will be implemented soon

    எனினும் மத்திய அரசோ எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் இல்லை என்கிறது. இந்த நிலையில் இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவதால் புதிய கல்விக் கொள்கை குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதன்படி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் கூறுகையில் புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி முறையாக மாற்ற இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

    ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன் மூலமாக, ஆய்வு கல்வி அதிகரிக்கப்படும். அனைத்து துறைகளிலும் உள்ள நிதி, இதற்கு பயன்படுத்தப்படும். உயர் கல்வி நிலையங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் தாய் வீடாக மாற்றப்படும். 400 கோடி ரூபாய், இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டடி இன் இந்தியா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டு வெளிநாட்டு மாணவர்களை நமது கல்வி முறையை கற்றுத்தர ஊக்கப்படுத்துவோம் என்றார் நிர்மலா சீதாராமன்.

    English summary
    National Education Policy will be implemented soon, says Nirmala Sitharaman in Budget 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X