குடிநீர் தொட்டியில் மலம்.. சிக்காத சாதி வெறியர்கள்! புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்பிக்கு பறந்த நோட்டீஸ்
குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை எஸ்பிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி: புதுக்கோட்டை வேங்கைவயலில் தலித்துகள் பயன்படுத்தும் உயர்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த சாதி வெறி குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்டது இறையூர் கிராமம். அதன் அருகே உள்ள பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் நீர்தேக்க தொட்டியில் கடந்த 2022 ஆண்டு டிசம்பர் மாதம் சாதி வெறியர்கள் மலம் கொட்டியது ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் ஆய்வு செய்ய சென்றார்.
அவரிடம் தலித் மக்கள் தங்களை கோயிலுக்குள் செல்ல உயர்சாதியினர் அனுமதி மறுப்பதாக தெரிவித்தார். இரட்டை குவளை முறை தொடர்வதாகவும் தலித் மக்கள் அவரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக சாமியாடிய பெண் உட்பட 4 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

உச்சக்கட்ட ஜாதி கொடுமை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமம் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வந்தார்கள். இவர்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் ஆதிக்க சாதியினர் மலம் கலந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குடிநீர் தொட்டியில் மலம்
இதனால் அந்த கிராம மக்களுக்கு கடந்த 2022 டிசம்பர் 25 அன்று அடுத்தடுத்து திடீர் உடல்நலக் குறைவும், ஒவ்வாமையும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து குடிநீரில்தான் பிரச்னை என்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியவுடன் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அவர்கள் பயன்படுத்திய 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப்பார்த்தபோது மலம் மிதந்து கொண்டிருந்தது.

இரட்டை குவளை முறை
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அங்கு தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை உள்ளது. கோவில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதையும் கண்டறிந்து உள்ளனர்.

கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ
இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கோட்டாட்சியர் குழந்தைசாமி பாதிக்கப்பட்ட மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்த நிலையில் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி குற்றம்சாட்டி வந்தனர்.

மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்
இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் பட்டியலின மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளும் படி அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விளக்கமளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications