என்னை கீழே படுக்க வைத்து மூச்சை நல்லா இழுத்துவிட கட்டாயப்படுத்துகிறாங்க! என்னால் முடியல! நித்யானந்தா
டெல்லி: டாக்டர்கள் என்னை கீழே படுக்க வைத்து மூச்சுவிட சொல்கிறார்கள். என்னால் முடியவில்லை என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
Recommended Video
நித்தியானந்தா கடந்த 6 மாதங்களாக சத்சங்கம் ஏதும் நடத்தவில்லை. இதனால் நித்தியானந்தா கைலாசா தீவில் இறந்துவிட்டார் என்று கூறி சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டாத குறையாக ஒரு தகவலை பரப்பினர்.
இந்த நிலையில் நித்தியானந்தா நான் சாகவில்லை , உயிருடன் இருக்கிறேன். சமாதி நிலையில் இருக்கிறேன் என்று கூறியதுடன் திரும்பி வந்துட்டேனு சொல்லு என எழுதி காட்டியுள்ளார்.

உடல்நிலை
இந்த நிலையில் நேற்று முன் தினம் தனது உடல்நிலை குறித்து பக்தர்களுக்கு நித்தியானந்தா புதியதொரு பேஸ்புக் பதிவை போட்டிருந்தார். அதில் தனது உடல் உறுப்புகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. 6 மாதங்களாக ஆகாரம் உட்கொள்ளாததால் வலு குறைந்துள்ளது. எல்லா மருத்துவ ரிப்போர்ட்களும் நன்றாக இருந்தாலும் உணவை வாயில் போட்டவுடன் வாந்தி வருகிறது.

6 மாதங்கள்
6 மாதங்களாக தூக்கம் வேறு இல்லை. எனவே பக்த கோடிகள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். நான் பத்மாசனத்தில் அமர்ந்தால் எல்லா நாடிகளும் சுவாசமும் அடங்கியிருக்கும். தற்போது நிர்வி கல்ப சமாதி நிலையில் எனது மனம் அமைதியாக இருக்கும். எனது மனம் இந்த உலகை மறந்துவிட்டது. என்னால் ஆழ்ந்து மூச்சுவிடமுடியவில்லை.

மூச்சு விடுதல்
ஆனால் மருத்துவர்கள் என்னை கீழே படுக்க வைத்து மூச்சு விடுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். தூக்கம், உணவு இல்லாமல் உடல் நிர்வி கல்ப சமாதிக்கு பழக்கமாகிவிட்டது. கிரகங்களும் கோள்களும் எனக்கு சாதகமாகவே உள்ளன. கைலாசாவில் மிகப் பெரிய மருத்துவமனை எல்லாம் இல்லை.

மருத்துவ கட்டமைப்பு
ஆனால் மிகப் பெரிய மருத்துவ கட்டமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்காக பக்தர்கள் யாரும் எனக்கு பணம் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். தனது உடலுக்கு ஒன்றும் இல்லாமல் எதற்காக அத்தனை மருத்துவ பரிசோதனைகளை நித்தியானந்தா எடுத்தார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications