டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக்கில் மோடி.. "மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது.." சீனா திடீர் அறிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: மோதல் போக்கை அதிகரிக்கும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி லடாக் சென்றுள்ள நிலையில், சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது - China

    சீன ராணுவத்தினர் லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிவிப்புமின்றி லடாக் பகுதிக்கு இன்று விரைந்தார்.

    நிம்மு ராணுவ முகாம் பகுதியில் ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அப்போது உடன் இருந்தார்.

    11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை 11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை

    பிரதமர் அலுவலகம்

    பிரதமர் அலுவலகம்

    இதுதொடர்பாக புகைப்படங்களை நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், நிம்மு பகுதியில் பார்வேர்ட் லோகேஷன் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார் என்றும், இன்று காலையிலேயே அங்கு சென்று சேர்ந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரம் கொண்ட அந்த பகுதி கடுமையான கால சூழ்நிலை உள்ள பகுதி என்றும், அந்த செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தூண்டக் கூடாது

    தூண்டக் கூடாது

    பதட்ட நிலையை குறைப்பதற்கு ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தைக்கு தேவையான தொடர்பு வசதிகளை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன. எந்த ஒரு தரப்பும் தற்போதுள்ள நிலையை மேலும் தூண்டுவதை போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது, என்று தெரிவித்துள்ளார்.

    சீனாவின் சந்தேகம்

    சீனாவின் சந்தேகம்

    இதன்மூலம் நரேந்திரமோடியின் லடாக் விசிட் என்பது சீனாவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்திய ராணுவம் சீன ராணுவத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடியே அங்கு நேரடியாக சென்றிருக்க கூடும் என்றும் சீனா அச்சப்படுகிறது.

    சீனாவுக்கு இதே வேலை

    சீனாவுக்கு இதே வேலை

    எனவே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்.. மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்று தனது பழைய பல்லவியை பாடி வருகிறது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் கூட, மற்றொரு பக்கம் சீன ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்போது இந்திய பிரதமர் லடாக் பகுதிக்கு விரைந்துள்ள நிலையில், அலறியடித்துக்கொண்டு இப்படி ஒரு அறிக்கையை சீனா வெளியிட்டு உள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    English summary
    India & China are in communication and negotiations on lowering the temperatures through military & diplomatic channels. No party should engage in any action that may escalate the situation at this point says, Zhao Lijian, Chinese Foreign Ministry spokesperson. Statement after PM Modis visit to Leh-Ladakh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X